துபாயில் ஒரு பிரியாணியின் விலை 1000 திர்ஹம் !

0

உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. 

துபாயில் ஒரு பிரியாணியின் விலை 1000 திர்ஹம் !
குறிப்பாக, துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன. 

இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. துபாயில் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டோரன்ட் உள்ளது.

இந்த பிரியாணி ரெஸ்டோரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரியாணியில் தங்கம் கலந்துள்ளது. ஒரு பிளேட் பிரியாணியின் விலை 1000 திர்ஹம்ஸ் (சுமார் 20 ஆயிரம் இந்திய ரூபாய்) (சுமார் 53 ஆயிரம் இலங்கை ரூபாய் )  என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு செய்வது எப்படி? 

இந்த பிரியாணியில் 23 கரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.  கிட்டத்தட்ட 6 பேர் ஒரு தட்டுபிரியாணியை உண்ண முடியும். 

துபாயில் ஒரு பிரியாணியின் விலை 1000 திர்ஹம்

உணவகத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் உணவு அட்டவணையில் ரோயல் கோல்ட் பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது.

பாம்பே போரோ ரெஸ்டோரன்ட் துபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ரோயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாம் பூரி செய்வது எப்படி?

இந்த பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும். 

பிரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெறும், 45 நிமிடங்ளில் இந்த பிரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)