ஆணின் பேன்ட் ஜிப்பை.. சிறுமி கையை பிடிப்பது.. பெண் நீதிபதி சர்ச்சை !

0

எந்த வகையான பாலியல் அத்துமீறல்கள் போக்சோ சட்டத்திற்குள் வரும் என நீதிபதிகள் கூறும் வரையறைகள், அவர்கள் கூறும் கருத்துக்கள், 

ஆணின் பேன்ட் ஜிப்பை திறப்பது
போக்சோ சட்டத்தை காரணமாக வைத்தே குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் குறித்து பெண்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றங்களைத் தடுக்கத்தான் போக்சோ சட்டமே வந்தது. ஆனால் அந்த நோக்கமே இது போன்ற தீர்ப்புகளால் கேள்விக் குறியாகி வருவது விசித்திரமாக உள்ளது.

நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !

குழந்தையின் ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் பாலியல் வன்கொடுமை என்று பொருள்கொள்ள முடியாது என்றும், 

அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனவும் பெண் நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா அதிர்ச்சி தீர்ப்பளித்திருந்தார். 

இந்தத் தீர்ப்பு பெரும் சர்ச்சையாவதற்கு முன்பே கடந்த ஜனவரி 15ம் தேதி மற்றொரு சர்ச்சை தீர்ப்பை அவர் வழங்கியிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

5 வயது சிறுமியை லிப்னஸ் குஜ்ஜூர் என்ற 50 வயது ஆண் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்தச் சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார்  அளித்திருந்தார். 

பெண் நீதிபதி சர்ச்சை !

இதனை யடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை  செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது.  

அப்போது, சிறுமியின் தாய் அளித்த சாட்சியத்தில், நான் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது எனது 5 வயது மகளின் கையை லிப்னஸ் பிடித்திருந்தார். 

அப்போது, அவருடைய பேண்ட் ஜிப் திறந்து வைத்திருந்த நிலையில் இருந்தது. என் மகளிடம் கேட்ட போது, அந்த நபர் படுக்கையில் உறங்க அழைத்ததாக தெரிவித்தாள், என்று கூறினார். 

லவங்க லதிகா தயார் செய்வது எப்படி?

இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டதால் லிப்னசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லிப்னஸ் நாக்பூரில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். 

ஆணின் பேன்ட் ஜிப்பை.. சிறுமி கையை பிடிப்பது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா அமர்வு, கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

இதில், ‘குற்றவாளியின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் சிறுமியை அவர் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது,’ என அதிரடியாக தீர்ப்பளித்தது.  

5 ஆண்டு சிறை தண்டனை 5 மாதங்களாக குறைக்கப்படுகிறது என்றும் புஷ்பா அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.  

சுவையான பிட்சா சாண்ட்விச் செய்வது எப்படி?

ஏற்கனவே ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் போக்சோவின் கீழ் வராது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

விளக்கமளிக்க நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது. அதே போல இந்தத் தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்படுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.

போக்சோ சட்டம்

போக்சோ சட்டம்

குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காகவும், குழந்தைகளை பாதுகாப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டதே போக்சோ சட்டம். 

இச்சட்டம் 2012 ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்காக, 

தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க எப்சம் உப்பு !

ஆயுள் தண்டனையாக இருந்த அதிகபட்ச தண்டனையை மரண தண்டனை என சட்டத்திருத்தம் கொண்டு வந்து, 2018 ல் மத்திய அரசு அவசர சட்டமும் இயற்றியது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)