தம்பி என்னப்பா செய்ற... மனதை தொட்ட சம்பவம் !

0

கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் மும்பையில் புறநகர் ரயில் சேவை அத்தியாவசியப் பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. 

மனதை தொட்ட சம்பவம்
மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்கள் புறநகர ரயில்களை இயக்குகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், 

முன்களப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் மும்பையில் அனைத்து உள்ளூர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையத்தில் பிளாட்பார்ம் எண் இரண்டில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறுவதற்கு முன்பு 

ஒரு இளைஞன் படியில் தலை குனிந்து தொட்டு வணங்கிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் டுவீட்டரில் இதை பதிவிட்ட ஒரு இளைஞன் "என் இதயத்தைத் தொட்ட ஒரு கிளிக், 11 மாதங்களுக்குப் பிறகு ஏறுவதற்கு முன்பு மும்பை ரயிலை வணங்கும் ஒரு பயணி என்று பதிவிட்டிருந்தார்.

தன் மகளுக்காக தாய் செய்யும் தியாகம் வைரல் வீடியோ !

இதற்கு மறு டுவீட் செய்த ஆனந்த் மஹிந்திரா என்பவர் இந்தியாவின் ஆத்மா… நாங்கள் அதை ஒரு போதும் இழக்க மாட்டோம் என்று பிரார்த்திக்கிறேன்… என்றும் பதிவிட்டிருந்தார். 

மேலும் இந்த புகைப்படம் பார்ப்போர் அனைவரையும், உணர்ச்சிவசப்பட செய்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)