விமானத்தில் சிகப்பு, பச்சை ஒளிரும் விளக்கு பயன்படுத்த காரணம் இது தான் !

0

விமானத்தின் இறக்கைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப் பட்டிருப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் கூட, 

விமானத்தில் சிகப்பு, பச்சை ஒளிரும் விளக்கு பயன்படுத்த காரணம்
வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான விமானங்களின் இறக்கைகளில் நிச்சயமாக வண்ண விளக்குகள் பொருத்தப் பட்டிருக்கும். அத்துடன் அவை சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளாக தான் இருக்கும். 

இப்படி விமானத்தின் இடது இறக்கையில் சிகப்பு விளக்கும், வலது இறக்கையில் பச்சை விளக்கும் வழங்கப்படுவதற்கு என்ன காரணம்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடற்பயணம் செய்யும் படகுகளில் இருந்து தான் இந்த சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்கு கலவையை விமானங்கள் பெற்றதாக கூறப்படுகிறது. 

படகுகளில் சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மோதலை தவிர்க்க முடிகிறது என்பதை கடந்த 19ம் நூற்றாண்டின் போது கடற்பயணம் மேற்கொள்பவர்கள் கண்டறிந்தனர். 

எனவே விமான துறையை சேர்ந்த நிபுணர்களும் அதே வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர்.

அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட விமானங்களின் இறக்கைகளில் ஏன் சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளை பயன்படுத்துகின்றனர்? என்பது  தெரியாது. 

விமானம் எந்த பாதையில் பயணம் செய்கிறது?

விமானங்களின் இறக்கைகளில் உள்ள சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகள் 'நேவிகேஷன் லைட்கள்' எனப்படுகின்றன.

இரவு நேரங்களில் வானில் விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது அதன் அருகாமையில் மற்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் பைலட்களுக்கு, 

மற்றொரு விமானம் பறந்து கொண்டுள்ளது என்பதை குறிப்பதற்காகவே இந்த 'நேவிகேஷன் லைட்கள்' வடிவமைக்கப் பட்டுள்ளன. 

அது மட்டும் இன்றி, விமானம் எந்த பாதையில் பயணம் செய்கிறது? என்பதையும் இந்த 'நேவிகேஷன் லைட்கள்' உணர்த்தி விடும்.

இதன் மூலம் வானில் ஏற்படும் மோதல் தவிர்க்கப்படும். வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான விமானங்களின் இறக்கையில் சிகப்பு விளக்கும், பச்சை விளக்கும் பொருத்தப் பட்டிருக்கும். 

இதில், சிகப்பு விளக்கு விமானத்தின் இடது பக்க இறக்கையிலும், பச்சை விளக்கு விமானத்தின் வலது பக்க இறக்கையிலும் பொருத்தப் பட்டிருக்கும்.

இதனை தவிர்த்து விமானங்களின் வால் பகுதியில் வெள்ளை விளக்கு ஒன்றும் பொருத்தப் பட்டிருக்கும். 

இதில், சிகப்பு மற்றும் பச்சை விளக்குகளை இறக்கைகளில் பயன்படுத்துவதற்கான காரணம், விமானத்தை எளிதாக பார்க்க முடியும் என்பது தான். 

வானில் மோதலுக்கான வாய்ப்பை குறைக்கிறது

விமானங்களின் இறக்கைகளில் சிகப்பு அல்லது பச்சை என்று இவற்றில் ஒன்று மட்டும்  இருந்தால், மற்ற பைலட்கள் அவற்றை தவறாக கணிக்க கூடும்.

எப்படி என்றால் விமானங்களுக்கு பதிலாக அவற்றை ட்ரோன்கள் என நினைத்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எனவே விமானங்களில் மட்டும் சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளின் கலவை பயன்படுத்தப்படுகிறது. 

இதன் மூலம் வானில் பறப்பது விமானமா அல்லது ட்ரோன்கள் பறக்கிறதா? என்று எளிதாக அவற்றை வேறுபடுத்தி பார்க்க முடியும்.

சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்கு கலவை விமானங்களை தெளிவாக தெரியும்படி செய்து, வானில் மோதலுக்கான வாய்ப்பை குறைக்கிறது. 

இதன் மூலம் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது. மனித கண்களால் சிகப்பு, பச்சை வண்ணத்தை மிக எளிதாக வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டரின் பைலட்
சரி, விமானங்களின் இறக்கைகளில் சிகப்பு, பச்சை மற்றும் வால் பகுதியில் வெள்ளை வண்ண விளக்கு வழங்கப்பட்டிருக்கும் என முன்னரே படித்தோம் அல்லவா? 

இந்த மூன்று விளக்குகளும், விமானங்கள் எந்த திசையில் இருந்து எந்த திசையில் செல்கின்றன? என்பதை மற்ற பைலட்கள் அறிந்து கொள்ள உதவி செய்கின்றன.

அதாவது ஒரு ஹெலிகாப்டரின் பைலட் இரவு நேரத்தில் தனது வலது பக்கத்தில், சிகப்பு மற்றும் வெள்ளை விளக்குகளை பார்க்கிறார் என்றால், விமானம் வலது பக்கத்தில் இருந்து இடது புறம் நோக்கி சென்று கொண்டுள்ளது என அர்த்தம். 

அதே நேரத்தில், அந்த ஹெலிகாப்டரின் பைலட் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளை பார்த்தால், விமானம் இடது புறத்தில் இருந்து வலது பக்கம் செல்கிறது என அர்த்தம்.

வானில் மோதல்களை தவிர்க்க பைலட்களுக்கு இந்த விளக்குகளின் கலவை எப்படி உதவி செய்கிறது? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும் என நம்புகிறோம். 

விமானங்களும், விமான பயணங்களும் இப்படி இன்னும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை உள்ளடக்கியது. அடுத்தடுத்த பதிவுகளில் உங்களுக்கு பயனுள்ள இன்னும் பல்வேறு தகவல்களை வழங்குகிறோம்.

விமானத்தில் சிகப்பு, பச்சை ஒளிரும் விளக்கு பயன்படுத்த காரணம் இது தான் !

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings