பூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு, ஆசிரியர் ஒருவர் காதல் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது கதவை தட்டிய தலைமை ஆசிரியையின் கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இருவரும் தினமும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்கள் என்பதும்,
இதனால் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, பள்ளிக்கு வந்த இருவரும், பூட்டிய வகுப்பறைக்குள் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி கேள்விப்பட்டு ஆத்திரத்துடன் அங்கு வந்த தலைமை ஆசிரியையின் கணவர், பள்ளிக்கு வந்து வகுப்பறை கதவை தட்டி தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் சத்தம் கேட்டு அந்த கிராம மக்கள் பள்ளியில் குவிந்தனர். கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன் வந்தார். அதன் பின்னரே, கதவை திறந்து இருவரும் வெளியே வந்தார்கள்.
சச்சின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி - ஆப்கானிஸ்தான் வீரர் !
பின்னர், நடந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் அவர் விசாரித்தனர்.
இதுபற்றி உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.
ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை !
பூட்டிய வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியைக்கு ஆசிரியர் ஒருவர் காதல் பாடம் நடத்தியதாக சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல தகவல் பரவியதால் ஆத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.