ஒருத்தருக்கு என்ன காரணத்தால் விறைப்புத் தன்மை பிரச்னை உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு, டோஸேஜை சரிப்படுத்தி கொடுக்கலாம் பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஷா துபேஷ் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.
வயாகரா என்பது என்ன?வயாகரா (Viagra) என்றதும் பெரும்பாலானோர் பாலுணர்வைத் தூண்டக்கூடிய, வாழ்க்கைத் துணைவியாரைத் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சிப் படுத்த உதவுவது தான் என நினைக்கின்றனர்.

இது தவறான எண்ணம். வயாகரா என்பது மருத்துவம் அடிப்படையிலும் எண்ணற்ற பயன்களையும் தன்னகத்தே கொண்டது. 

குறிப்பாக இதயம், நுரையீரல் போன்றவற்றைப் பலப்படுத்த இந்த மாத்திரை உதவுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
உண்மையில் வயாகரா தாம்பத்ய நோக்கத்துக் காக மட்டுமே தயாரிக்கப்பட வில்லை. அது மிகவும் தற்செயலான மருத்துவ விபத்து என்று கூட சொல்லலாம். 
அமெரிக்கா வின் பிரபலமான மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்க ளான ஆண்ட்ரில் பெல், டேவிட் பிரவுன் மற்றும் நிக்கோலஸ் டெரேட் ஆகியோர் 

இதய தமனியை விரிவடைய செய்வதற்கான மாத்திரை ஒன்றை புதிதாகக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தனர்.

பரிசோதனை முறையில் மனிதனின் உடலில் அதனை செலுத்திய போது இதய தமனி பெரிதாக விரிவடைந்தது.

இதனுடன், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் விதமாக அவனுடைய இனப்பெருக்க உறுப்பும் பல மணி நேரம் விறைப்புத் தன்மையுடன் காணப்பட்டது. 
இதனால் குழப்பம் அடைந்த மருத்துவ வல்லுனர்கள் மேலும் எண்ணற்ற பரிசோதனை களை மேற்கொண்டனர். 

அதன் பிறகே, ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பாலுணர்வை நீட்டிக்க செய்ய இந்த மாத்திரை உதவும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

வயாகரா ஆண்களுக்கு எப்படி உதவுகிறது?
வயாகரா ஆண்களுக்கு எப்படி உதவுகிறது?
விறைப்புத்தன்மை குறைவால் அவதிப்படுகிற ஆண்களுக்கு, வயாகரா மாத்திரை அக்குறை பாட்டை சரி செய்யும். 

வயாகரா ரத்தத்தில் கலந்ததும் நைட்ரிக் ஆக்ஸைடு CGMP என்ற வேதிப் பொருளை ஏராளமாக உற்பத்தி செய்கிறது. 

இதன் காரணமாக, ஆண்குறி சுருக்கத்துக்குக் காரணமான PDE5 என்ற நொதிப்பொருள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது. 

எனவே, ரத்த நாளங்களில் அடைப்பு நீக்கப்பட்டு ஆணுறுப்பு விறைப்புத் தன்மை பெறுகிறது.
ஆணுறுப்பிற்குச் செல்கிற ரத்த ஓட்டம் அதிகரிப்பின் காரணமாக, அவர்களால் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்திகர மாக ஈடுபட முடியும்.

ஆனால், இனப்பெருக்க உறுப்புக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து விறைப்புத் தன்மை நீடிக்கும் என்பதை மட்டுமே பலர் மேலோட்ட மாகப் புரிந்து கொள்கிறார்கள். 

இதனால், மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே ‘ஓவர் த கவுன்ட்டர்’ முறையில் சிலர் வயாகராவை வாங்கிக் கொள்கின்றனர். 

இந்த டிமாண்டை உணர்ந்து கொண்ட பல பார்மசிகள் இன்று சர்வ சாதாரணமாக வயாகராவை விற்கிறார்கள். 

இது ஆபத்தானது. ஏனென்றால், விறைப்புத் தன்மை மட்டும் தான் தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருப்பதற்கான அறிகுறி. பொதுவாக, ஆண்மைக் குறைவு அல்லது ஆண் மலட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு 
மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 25 மில்லி கிராம் தான் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வார்கள். அதுவும் பிரச்னை இருந்தால் மட்டுமே வயாகராவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

உணவு உண்ட 45 நிமிடங்கள் கழித்து வயாகரா உட்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 10 முதல் 15 நிமிடங் களுக்குப் பின்னர் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது நல்லது. 

விறைப்புத் தன்மை நார்மலாக உள்ளவர்கள் இந்த மாத்திரையைத் தவிர்க்க வேண்டும்.