ஆறு முதல் ஏழடி நீளமுள்ள மயில் மீன்கள் !

0

ஒரு பகுதி நிலப்பரப்பை மூன்று பகுதி நீராகச் சூழ்ந்து பிரம்மாண்டமாக எல்லையில்லா அற்புதங்களை, அதிசய உயிரினங்களை உள்ளடக்கி காட்சி தருகிறது கடல். 

ஆறு முதல் ஏழடி நீளமுள்ள மயில் மீன்கள்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தண்ணீர் மட்டுமே நிரம்பி அலையெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் மனிதனுக்கு எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான் (The sea is always something interesting to man.). 

ரசிக்கும் அதே வேலையில் கடல் நம்மை பயமுறுத்தவும் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடலில் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் கூட ஏராளமாக இருக்கின்றன (Even invisible creatures abound in the sea.). 

கடலில் மேயும் பசுக்கள்

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மில்லி லிட்டர் கடல் நீரை குடிக்கிறீர்கள் என்றால் அதில் ஒரு மில்லியன் பாக்டீரியாக்களும் பத்து மில்லியன் வைரஸ்களும் இருக்கின்றன.

கடலில் உள்ள மீன்கள் மட்டுமே எண்ணிலடங்காத வகையில் உள்ளன (The only fish in the ocean are innumerable.). மீன்களின் வகை எண்ணிலடங்காதவையாக இருந்தாலும் ஒரு சில மீன்கள் நம் மீனவர்களால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

மயில் மீன்கள்

அவற்றில் ஒன்று தான் மயில் மீன். ஆங்கிலத்தில் ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று அழைக்கப்படும் இந்த மீனின் விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடியஸ் ஆகும். 

கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்று அர்த்தம். இது சுமார் ஒன்பது அடி நீளம் வரை வளரக்கூடியது. உலகம் முழுதும் உள்ள சற்று வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் காணப்படும். 

மின்னும் கடல் ஆமை

பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். முதுகுப்புறம் விரித்த மயில் தோகை போன்ற அமைப்பு கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

இந்த மீனினத்தில் பல வகைகளுள்ளன (There are many types of this fish.). அதிக அளவாக சுமார் 90 கிலோ வரை இறைச்சியையுடையது. எனினும் நீளம் மற்றும் எடையில் பல்வேறு வேறுபாடுகள் கொண்டவையாக உள்ளன. 

ஆறு முதல் ஏழடி நீளமுள்ள மயில் மீன்கள்

தமிழகத்தில் தூத்துக்குடிக் கடற்பிரதேசத்தில் அரிதாக சாம்பல் நிறமுள்ள, ஆறு முதல் ஏழடி நீளமுள்ள மயில் மீன்கள் பிடிபடுகின்றன. இது கடல் வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியது. 

மணிக்குச் சராசரியாக 100 கி.மீ. வேகத்தில் நீந்தும். கடலின் மேல்பரப்பில் தாவித்தாவி நீந்தும் போது படகிலுள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. 

சவுதி – பஹ்ரைன் இடையே கடல் பாலம்

ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மயில் மீன்களைத் தூண்டில் போட்டு பிடிப்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)