சவுதி – பஹ்ரைன் இடையே கடல் பாலம் !

0
சவுதி – பஹ்ரைன் இடையே 'கிங் பஹத் காஸ்வே' (King Fahd Causeway) என்ற பெயரில் 25 கி.மீ தூர கடற்பாலம் 1986 ஆம் ஆண்டு கட்டப் பட்டு நவம்பர் 26 ஆம் தேதி திறக்கப் பட்டது. 
சவுதி – பஹ்ரைன் இடையே கடல் பாலம் !
இந்தப் பாலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு இரு புறமுமாக 40,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. 

இந்நிலையில், 'கிங் ஹமாத் காஸ்வே' (King Hamad Causeway) என்ற பெயரில் புதிய கடற்பாலம் ஒன்றை நிர்மானித்திட ஒப்பந்தம் கையெழுத் தானது.

இந்த புதிய கடற்பாலத்தை தனியார் நிறுவனங்கள் கட்ட வுள்ளன. 

இந்த கடற் பாலத்தை யொட்டியே, GCC Railway Network எனப்படும் வளைகுடா அரபுநாடுகளை ஒன்றிணைக்கும் 2,170 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே திட்டத்தின் கீழ்
ரயில்வே கடற்பாலமும் கூடுதலாக அமையவுள்ளது. இந்த புதிய திட்டங்கள் இன்னும் 4 ஆண்டுகளில் நிறைவுறும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings