அழிந்து வரும் மின்னும் கடல் ஆமை !

அண்மையில் சாலமன் தீவில் (Solomon Islands) அறிவியலாளர்கள் முக்குளித்த போது (Diving) ஓர் அரிய வகை கடல் ஆமையைக் கண்டுபிடித்தனர்.
அழிந்து வரும் மின்னும் கடல் ஆமை !
அது மிளிரும் (Biofluorescence) ஊர்வனவற்றில் முதல் பதிவாகும். இந்த கடல் ஆமை நியான் (Neon) பச்சை மற்றும் சிவப்பு வண்ணத்தில் மின்னக் கூடியது.

இந்த ஆக்ஸ்பில் (Hawksbill) கடல் ஆமை மிக வேகமாக அழிந்து வரும் உயிரினங்க ளுள் ஒன்று.

அதன் ஒளிரும் தன்மையின் காரணமாக மேற்பரப்பில் விழக்கூடிய நீலநிற ஒளியை பிரதிபலித்து மற்ற வண்ணங்களாக (Red, Green & Orange) வெளிப்படுத்து கின்றன.

உயிரியல் ஒளிரும் (Bioluminescence) தன்மையும், உயிரியல் மிளிரும் (Biofluore scence) தன்மையும் வேறு பாடுடையது. 

உயிரியல் ஒளிரும் தன்மையில் உயிரினங்கள் தன்னிச்சை யாகவே ஒளியை உற்பத்தி செய்யக் கூடிய தன்மை யுடையதாக இருக்கும்.

உயிரியல் மிளிரும் தன்மை பொதுவாக இரையை ஈர்க்கவும், தன்னை பாதுகாக்க வும் உயிரினங்கள் பயன் படுத்து கின்றன.
அண்மையில் செய்த ஆராய்ச்சியில் மிளிரும் தன்மை மிக்க பலவகையான கடல்வாழ் உயிரினங்கள் கண்டு பிடிக்கப்பட் டுள்ளன. 

ஆனால் இத்தன்மை கடல்வாழ் ஊர்வனவ ற்றில் (Marine Reptile) உள்ளது என்பது வியப்பிற் குரிய ஓர் அரிய கண்டு பிடிப்பாகும். 

நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் டேவிட் க்ருபர் (David Gruber, University of New York) சாலமன் தீவில் 2015 ஜூலை மாத கடைசியில் மிளிரும் தன்மையுடைய பவழப் பாறைகளையும், 

சிறிய சுறா மீன்களையும் ஆவணப் படுத்துவத ற்காக முக்குளித்த போது இந்த அரிய வகையான ஆக்ஸ்பில் கடல் ஆமையைக் கண்டு பிடித்தார்.

அவர் இதைப் பற்றிக் கூறும் போது, சிறிது தூரம் அந்த கடல் ஆமையைப் பின் தொடர்ந்து அதன் மிளிரும் தன்மையைப் பதிவு செய்தேன். அதன் பிறகு அத்தீவில் வாழும் மக்களிடம் இந்த கடல் ஆமையைப் பற்றிய செய்தி களைச் சேகரித்த போது, 

சிலர் அக்கடல் ஆமைக ளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. பதுக்கி வைத்த ஆமைகளை ஆராய்ந்த போது அவைகள் அனைத்தும் மிளிரும் தன்மையினால் சிவப்பு வண்ணத்தை வெளிப்படுத்தின.
ஆக்ஸ்பில் கடல் ஆமைகள் இந்த மிளிரும் தன்மையி னால் கடற்படுக் கையில் அமையப் பெற்றுள்ள பவழப் பாறைக ளைப் போலவே காணப்படு வதால் அவைகளைக் காண்பது அரிதுஞ என்றார்.

டேவிட் க்ருபர் (David Gruber) அவர்கள், ஆக்ஸ்பில் கடல் ஆமை வெளிப் படுத்தும் சிவப்பு நிறத்திற்கு அதன் ஓட்டில் இருக்கப் பெறும் பாசிகளே காரணம் எனவும்

அதன் பச்சை நிற வெளிப்பாடு அவற்றின் மிளிரும் தன்மையி னாலேயே வெளிப்ப டுகின்றன எனவும் கருதுகின்றார்.

இந்த ஆக்ஸ்பில் கடல் ஆமைகளின் எண்ணிக்கை உலகில் மிகவும் குறைவாக உள்ளதால் இந்த இனத்தைப் பற்றி ஆராயவும், படிக்கவும் இயலாத நிலை உள்ளது.
ஆனால் இந்த ஆக்ஸ்பில் கடல் ஆமை இனத்திற்கு மிகவும் நெருக்கமான பசுங் கடல் ஆமைகளின் (Green Sea Turtle) தன்மைகளை ஆராய்வதன் மூலமாக மிளிரும் தன்மை யுடைய ஆக்ஸ்பில் கடல் ஆமைகளை ப் பற்றி அறியலாம்

என டேவிட் க்ருபர் (David Gruber) தெரிவி க்கிறார். இத்தகைய மிக அரிய வகை யான கடல் ஆமைகளை நாம் சிறந்த கவனத்தோடு பாதுகாக்க வேண்டியது அவசியம்.
Tags:
Privacy and cookie settings