நம் கண்களை அழுத்தி தேய்த்தால் வரும் பிரச்சனைகள் !

0
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் .என்பது போல நம்முடைய கண்கள் நோய்களை காட்டும் கண்ணாடி என்று  சொல்லுவார்கள்.   நம்ம உடம்புல சோர்வு ஏற்படும் போதெல்லாம்  அது  நம்முடைய  கண்களில் பிரதிபலிக்கும் . 
நம் கண்களை அழுத்தி தேய்த்தால் வரும் பிரச்சனைகள்

அந்த மாதிரி சமயத்துல சில பேர் கண்களில் கையை  வைத்து  கசக்கு வார்கள். மேலும் அவர்கள் கண்களை சுற்றி  தடவி மசாஜ் செய்வார்கள்.  சில பேர் கண்களில் தூசு விழுந்தாலோ அல்லது அரிப்பு ஏற்பட்டாலும்  கண்களை  அழுத்தமாக  தேய்ப்பார்கள்.  
இப்படி  நம்முடைய கண்களை அழுத்தித் தேய்ப்பது சரியான வழிமுறை அல்ல. அது நம்முடைய கண்களுக்கு ஆரோக்கியக் கேட்டினை ஏற்படுத்தும். கண்களை தொடர்ந்து தேய்த்து கொண்டே இருப்பதால்  கண்ணில் உள்ள விழித்திரை ஆனது  பலவீனம் அடையக்கூடும் .  

சில நேரங்களில் அது சிதைந்து போகும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு. விழித்திரை திசுக்களை தொடர்ந்து தேய்த்தாள்  அதன் தன்மையானது மாறிவிடும்.  

இந்த பாதிப்பு அதிகமானால் விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பொதுவாக கண்களில் தூசு விழுந்தால் எரிச்சலை ஏற்படுத்தும் . 
அப்போது பலரும் கண்களை தேய்த்துக் கொண்டும், கண்களை கசக்கினாள் தூசி வெளியே வந்து விடும் என்று  கருதுகிறார்கள்.  இதனாலேயே கண்களை அழுத்தித் தேய்ப்பார்கள் . 

ஆனால் சில சமயங்களில் அப்படி தூசி வெளியே வந்து விட்டாலும்  தன்னுடைய கண்ணை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதனால் ஒரு வேளை விழித்திரையில் கீரலோ, அல்லது சேதமோ ஏற்பட்டிருந்தால்  அதனை கவனிப்பது அவசியமாகிறது.  

மேலும் இதை அப்படியே விட்டு விட்டால் கண்களில்  புண்கள் தோன்ற வாய்ப்புண்டு. அது உள் உறுப்புக்குள் பரவினால்  அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்.  சிலருக்கு கண்களில் திரவம் போல வடியத் தொடங்கும்.  
நம் கண்களை அழுத்தி தேய்த்தால்
இது கண் அழுத்த நோய்க்கான  அறிகுறியாகும்.  இதை கவனிக்காமல் விட்டு விடுவதனால் பார்வை நரம்புகளையும் சேதப்படுத்தி பார்வை கோளாறு ஏற்பட  வாய்ப்பிருக்கிறது. 

இதனால் எந்த சமயத்திலும் நம்முடைய கைகளை கொண்டு  கண்களை அடிக்கடி தொடவும் கூடாது. தேய்க்கவும் கூடாது. இதனால் நம்முடைய கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் கண்களுக்கு பரவி  நம்முடைய கண்கள் இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாற தொடங்கும் .  
இந்த மாற்றத்தினை உடனே கவனித்து மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். மேலும் லட்சக்கணக்கான மக்கள் மையோபியா எனப்படும் கிட்டப்பார்வை பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.  

எனவே நம்முடைய கண்களை அழுத்தித் தேய்ப்பது இன்றோடு விட்டு விடுவோம் . இந்த தகவலை மற்றவர்களுக்கும்  ஷேர் செய்யுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)