கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தை சூறையாடிய பெரும் புயல்கள் !

0

தமிழகத்தை புயல் தாக்குவது பெரிய விசயமில்லை. 20 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் கடலோர மாவட்டங்களை சூறையாடிய சுனாமியையே பார்த்திருக்கிறார்கள்.

நிவர் புயல்

12 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 24 ஆம் தேதி நிவர் புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. 

இது கரையை கடந்து கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன எங்கெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

ஃபர்னூஸ் புயல்

ஃபர்னூஸ் புயல்

கடந்த 2005ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் வங்கக் கடலில் உருவானது. இதில், டிசம்பர் முதல் வாரத்தில் உருவான ஃபர்னூஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 

2005ம் ஆண்டு மொத்தமாக 773 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது 79 சதவீதம் இயல்பைவிடக் கூடுதல். பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 101 கிலோ மீட்டர். 

நிஷா புயல்

நிஷா புயல்

கடந்த 2008 -ஆம் ஆண்டு மே மாதம்  19 -ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக மாறியது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான பெரும் புயல். 

நிஷா புயலின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது, சுமார் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளது. 180 பேர் இதில் பலியாயினர். இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 85 கிலோ மீட்டர். 

லைலா புயல்

லைலா புயல்

கடந்த 2010 -ஆம் ஆண்டு நவம்பர் 24 -ஆம் தேதி வங்கக் கடலில் உருவான இந்தப் புயல், மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் 

சென்னைக்குக் கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு 300 கி.மீ தொலைவிலும் விசாகப்பட்டனத்துக்கு 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. 

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

இந்த புயலால் 9  பேர் இதில் பலியாயினர். இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 85 கிலோ மீட்டர். 

ஜல் புயல்

ஜல் புயல்

கடந்த 2010ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6ஆம் தேதி 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. 

இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 111 கிலோ மீட்டர். இந்தப் புயலின் தாக்கத்தினால் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர் மழையால் பல்லாயிரக்கணக்கான பயிர்களும் சேதம் அடைந்தது.

தானே புயல்

தானே புயல்

கடந்த 2011 ஆம் ஆண்டு வங்கக் கடலில் உருவான முதலாவது அதிதீவிரப் புயலாகும். காற்றின் வேகம் மணிக்கு 125 கிலோ மீட்டர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. 

பெண்கள் சரியாக தூங்காவிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் !

40,000 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, பலரின் வாழ்வாதாரத்தை  அழித்தது  இந்தப் புயல். இதற்கு 48 பேர் இதில் பலியாயினர்.

நீலம் புயல்

நீலம் புயல்

கடந்த 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 28ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி புயலாக மாறியது. 

காற்றின் வேகம் மணிக்கு 83 கிலோ மீட்டர். இதில் 20 க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பலரின் வாழ்வாதாரத்தை  அழித்தது .

மடி புயல்

மடி புயல்

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மடி புயல் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. 

ஆணுறுப்பு, மார்பகம் மட்டும் கருமையாக காணப்படுவது ஏன்?

மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. நாகையில் 10 நாட்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது.

வர்தா புயல்

வர்தா புயல்

கடந்த 2016 ஆம் ஆண்டில் வருடக் கடைசியான டிசம்பர் மாதம் உருவான வரதா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து. டிசம்பர் 12 சென்னையைக் கடந்து சென்றது. 

இந்தப் புயலின் போது எண்ணூர் துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது.

கருவில் இதயம் எப்படி உருவாகிறது? 

இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர்.  இதனால் சென்னையில் ரூ.1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. இதில் 15 -க்கும் மேற்பட்டோர் பலியாகினர்

ஒக்கி புயல்

ஒக்கி புயல்

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் கேரளாவைப் புரட்டிப் போட்டது ஒக்கி புயல். பல ஆயிரக்கணக்கான மரங்களையும், மின்சார கம்பங்களையும் பிடுங்கி வீசியது. 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாயினர். கன்னியாகுமரியே தனித்தீவானது. 

கர்ப்பப்பையில் கட்டிகள் பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது !

இந்தப் புயல் பாதிப்பிலிருந்து இன்னமும் பலர் மீளவில்லை. இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 185 கிலோ மீட்டர். 

கஜா புயல்

கஜா புயல்

கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கிய கஜா புயலால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள், விவசாயப் பயிர்கள் பெரும் சேதமடைந்தன. 

86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான படகுகள் சுக்கு நூறாகின. பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து நாசமாக்கியது. 

கஜா புயலின் தாக்கத்திலிருந்து வேதாரண்யம், நாகை பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. இந்த புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டர். 

கரையை கடக்கும் நிவர் புயல்

கரையை கடக்கும் நிவர் புயல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

இது குறித்து வானிலை மையம் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும். 

கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..? ரூசீகரமான தகவல்கள் !

இதுவரை16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வந்த புயல் தற்போது வேகம் குறைந்து 12 கி.மீ வேகத்தில் வருகிறது. இரவு 11 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை தொடும். 

அதிகாலை 3 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை கடக்கும். புயல் முழுமையாக கரையை கடக்க காலை 10 மணி ஆகலாம். 

புயல் கரையை கடக்கும்போது வலுப்பெறும். புயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)