போலீசுக்கே தண்ணி காட்டிய ஜெயமாலா... சேசிங்.. பிடிபட்டது எப்படி?

0
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

போலீசுக்கே தண்ணி காட்டிய ஜெயமாலா...

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். 

மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார். ஜெயமாலா – ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்… 
தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், டைவர்ஸ் கேட்டிருந்தார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.. 

அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.
எல்லா சொத்துக்களையும் 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுக்கவும் தான், இது தகராறாக உருவெடுத்தது. சம்பவத்தன்று, புனேவில் இருந்து, 

தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்த மருமகள் ஜெயமாலா, மாமனார், மாமியார், கணவனை சுட்டு தள்ளினார். 

ஒவ்வொருவரையும் 5 முறை துப்பாக்கியால் நிறுத்தி நிதானமாக சுட்டு கொன்றுள்ளார்.
இந்நிலையில், இந்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளது எப்படி என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது. 

முதலாவதாக, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தான ஆராய்ந்துள்ளனர்.. 

அதில், அந்த வீட்டுக்கு வந்த காரின் ரிஜிஸ்டர் நம்பரை போலீஸார் கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது தான் ஜெயமாலா சிக்கினார். 

காட்டிய ஜெயமாலா  பிடிபட்டது எப்படி?
அதனால், கொலை செய்து விட்டு, ஒரே நாளில் தமிழகத்தை விட்டு காரில் தப்பி இருக்க முடியாது என்பதால், சென்னை, செங்கல்பட்டு, புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தேடியிருக்கிறார்கள்.

பிறகுதான் காரை கண்டுபிடித்து, பின்னாடியே துரத்தி சென்று அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். 

ஆனால் புனேவில் அந்த காரை கண்டுபிடித்து விட்டும், அந்த காரின் வேகத்துக்கு போலீசாரால் துரத்தி பிடிக்க முடியவில்லை.. 
சினிமாவில் வரும் சீன் போலவே புனே நடுரோட்டில் சேசிங் நடந்ததாம். இறுதியில் தனிப்படை போலீஸார், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அந்த காரை மடக்கினர். 
ஆனால், காருக்குள் ஜெயமாலா இல்லை. ஜெயமாலாவின் அண்ணன், உறவினர்களான கைலாஷ் 32, ரவீந்தரநாத் கர் 25, விஜய் உத்தம் கமல் 28, ஆகிய 3 பேரும் இருந்துள்ளனர். 

அவர்களை தான் கைது செய்து, அந்த காரையும், அவர்களிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். 

சொத்தை அபகரிக்க முறைப்படி கோர்ட்டில் கேஸ் போட்டிருந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சணை கொடுமை என்று ஜெயமாலா ஏற்கனவே புகார் ஒன்றை தந்துள்ளாராம்.. 
நூற்றுக்கணக்கில் காகங்கள்? இயற்கையின் எச்சரிக்கை உண்மை என்ன?
சம்பவத்தன்று சொத்து விஷயமாக ரொம்ப நேரமாக சண்டை போட்டுள்ளார்.. இறுதியில் தான் துப்பாக்கியில் சுட்டிருக்கிறார்.. அதுவும் குறி பார்த்து தான் சுட்டிருக்கிறார்.

இதனிடையே, தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரரும் வழக்கறிஞருமான விலாஷ், 

ராஜூ ஷிண்டே ஆகிய மூவரும் ஆக்ரா போலீசார் உதவியுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதில் வழக்கறிஞரான விலாஷுக்கு மகாராஷ்ட்ரா போலீசில் சில கருப்பு ஆடுகள் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது. 
அவர்கள் மூலமாக தங்களை தேடி வந்த தனிப்படை போலீசாரின் செல்போன் நம்பர்களை பெற்று, அதன் சிக்னலை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள், 

எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் போன்ற தகவலை வக்கீல் விலாஷ் ரகசியமாக பெற்று, போலீஸ் பிடியில் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பியதாக கூறப்படுகின்றது.

போலீசுக்கே தண்ணி காட்டிய ஜெயமாலா சேசிங்

அதே நேரத்தில் வக்கீல் விலாஷ் கும்பலோ போலீஸ் வருவதை அறிந்து மகராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், புனே, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி என 

வெவ்வேறு இடங்களுக்கு செல்போன் எண்களை மாற்றிக் கொண்டே தப்பியதால், அவர்களை பிடிப்பது போலீசாருக்கு கூடுதல் சவாலாகவே இருந்தது.
விசாரணையில் விலாஷ், தனது நண்பர் மூலம் பல சிம்கார்டுகள் மற்றும் சாதாரண செல்போன்களை வாங்கியது தெரியவந்தது. 

இதன் பின் உஷாரான போலீசார் தங்கள் நகர்வையும், பிடிக்க செல்வதையும் முன்கூட்டியே அறிந்து 3 பேரும் தப்பி செல்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)