கீழடியில் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் !

கீழடியில் பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட ஆறாம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியுள்ளது. 
குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
தற்போது இங்கு பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது.  இன்னும் பல மர்ம முடிச்சுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

இந்தக் கீழடி கிராமமானது மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  
இங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது தமிழன் நாகரிகத்தைப் பறை சாற்றுகிறது.

உலகையே வியக்க வைக்கும் இந்த கீழடி ஆராய்ச்சியில் இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இது தற்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டும் குழந்தைகள் உடல் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
இந்த குழந்தை எழும்படி மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்கள் கடமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த குழந்தைகளின் படிமங்களில் தலை மட்டும் மிகப்பெரியதாக உள்ளது.  

உடலின் மற்ற பகுதிகள் அனைத்தும் சாதாரணமாகவே இருக்கிறது இந்த குழந்தைகளின் தலை மட்டும் ஏன் பெரிதாக இருக்கிறது என்பதற்கான சரியான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை .. 
இருந்தாலும் அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் தகவலின்படி நீண்ட காலம் புதைக்கப்பட்ட படிமங்களில் இப்படியான மாற்றம் காணப்படும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த குழந்தைகள் வயது மற்றும் பாலினம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 
கீழடியில் அவிழும் முடிச்சுகள்
இது எத்தனை ஆண்டு பழமையானது என்பது ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும்.  இவற்றின் நிலையை வைத்து பார்க்கும் பொழுது இவை நிச்சயமாக கிமு ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தற்பொழுது முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சரியாகச் சொன்னால் இது கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 வருடங்களுக்கு முந்தையது என்பது ஆச்சரியமாக உள்ளது.
Tags: