பீருக்கு வந்த சோதனை.. இப்படியெல்லாம் யோசிக்கக்கூட முடியல !

இந்தியாவில் உள்ள நகரங்களில் மக்கள் கொரோனாவை எதிர்த்து போராடும் வேளையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பிரிட்ஜில் அதிகம் சேமித்து வைக்கப்படுவதால் பீர் வாங்குவதை மக்கள் குறைத்து விட்டனர்.
பீருக்கு வந்த சோதனை

அத்துடன் ஹாட்டுக்கு அதிகம் பேர் மாறி இருக்கிறார்கள். பீர் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

தொற்றுநோய்க்கு முன்பு இந்தியா மிகப்பெரிய பீர் சந்தைகளில் ஒன்றாக திகழ்ந்தது. ஆண்டுக்கு சுமார் 340 மில்லியன் கேஸ் பீர்கள் விற்பனையாகும். ஒரு கேஸ் பீர் என்பது 7.8 லிட்டர் ஆகும். 
அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு 265 கோடியே 20 லட்சம் லிட்டர் பீர் விற்பனையாகிறது. ( 265,20,00,000 லிட்டர்).

இந்நிலையில் இந்தியாவில் நகர்புற வீடுகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற் காக தங்கள் குளிர்சாதன பெட்டிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேமித்து வைக்கிறார்கள். 

பிரிட்ஜில் கூலிங் பீருக்கு இடமில்லாததால் அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

ஹாட் சரக்கு
ஹாட் சரக்கு

இந்தியாவின் பீர் சந்தையில் மிகப்பிரபலமான பீர் நிறுவனமான யுனைடெட் ப்ரூவரிஸ் (யுபி) இதுபற்றி கூறுகையில் குடிமகன்கள் தற்போது அதிகளவில் ஓட்கா, ரம் மற்றும் வழக்கமான விஸ்கி போன்ற ஹாட் சரக்குகளை விரும்புகிறார்கள், 

ஏனெனில் பீர் எடுத்து செல்வதற்கும் சேமித்து வைப்பதற்கு இப்போது போதுமான சூழல் இல்லை என்று தெரிவித்தது.

பிராந்திக்கு மாறிவிட்டார்கள்

"வீட்டில் மது அருந்துவது எளிதானது. ஆனால் பீர் குடிக்க வேண்டுமெனில் அதை வாங்கி சேமிக்க வேண்டும். இப்போது இது கடினமாகி யுள்ளது. பெரும்பாலான இந்திய வீடுகளில் மது அருந்துவது தடை செய்யப்படவில்லை. 

அத்துடன் குளிர்சாதன பெட்டியில் பீர் சேமித்து வைக்கும் பழக்கம் வழக்கமானதல்ல. 
இதனால் மக்கள் அதிகம் பேர் ஹாட்டுக்கு மாறி விட்டார்கள் என கிங்பிஷர் மற்றும் ஹெய்னெக்கன் போன்ற பிராண்டுகளை விற்கும் யுபியின் நிர்வாக இயக்குனர் சேகர் ராமமூர்த்தி கூறினார். .

குளிர்ச்சியாக வேண்டும்
குளிர்ச்சியாக வேண்டும்

மேலும் அவர் கூறுகையில் இப்படி சொல்வதால் மக்கள் பீர் குடிக்க விரும்பவில்லை என்பது அல்ல. ஆனால் பீர் குடிக்க வேண்டுமெனில் குளிர்ச்சியாக உட்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

இதனால் அவர்கள் இப்போது பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட ஹாட் மதுவுக்கு மாறி விட்டார்கள். இது பீர் உற்பத்தி தொழில்துறையை மிகவும் பாதித்துள்ளது, என்றும் ராமமூர்த்தி கூறினார்.

யாரும் வாங்கவில்லை

இரு பீர் நிறுவனங்களான யுபி மற்றும் அன்ஹீசர் புஷ் இன்பேவ் (ஏபி இன்பெவ் கருத்து என்ன வென்றால், மகாராஷ்டிரா, 

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட வீட்டு விநியோக / இணையவழி மதுவிற்பனையில் கூட பீரை விற்க முடியவில்லையாம். 
ஏனெனில் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட சரக்கை தான் விற்பனை நிறுவனங்கள் வழங்க விரும்புகின்றன. பீரை பேக் செய்வது கடினமானது. மற்றும் குளிர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்பதால் இதை விரும்ப வில்லையாம்.

கொரோனா பாதிப்பு

"ஈ-காமர்ஸ் தளங்கள் வீட்டு ஆல்கஹால் விநியோகத்தை செயல் படுத்துவதற்கு அனுமதித்த அரசுகளை ஏபி இன்பேவில் தெற்காசியாவின் தலைவர் கார்த்திகேயா சர்மா பாராட்டினார். 

எனினும் வரிவிதிப்பு காரணமாக விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து காரணங்களும், பீர் நுகர்வோருக்கு ஒரு இலாபகரமான விருப்பமாகத் தெரியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்றும் 

குறிப்பாக தொற்றுநோய் அவர்களின் விருப்பப்படி செலவினங்களை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்திய ஒரு நேரத்தில். 

ஹாட் மதுவகைகளை விட பீர் மது வகைக்கு 60% அதிகமாக வரி விதிக்கப்படுகிறது என்றும் கவலையை வெளிப்படுத்தினார்.
பீர் தயாரிப்பாளர்கள்
பீருக்கு வந்த சோதனை

தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் ஒட்டுமொத்த பொருளாதார மந்தநிலை மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாக மதுபானம் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே ஒரு நிதிநெருக்கடியை சந்தித்தாக கூறுகிறார்கள். 

இப்போது பீர் தேவை சரிவு என்பது. மோசமான விஷயம் என்கிறார்கள் பீர் தயாரிப்பாளர்கள் . இப்போது வளர்ச்சியைப் பற்றி பேசுவது சாத்தியமில்லை. 
கடந்த ஆண்டு இதே நேரத்தில் நாங்கள் விற்பனை செய்ததில் கிட்டத்தட்ட பாதி தான் விற்பனையாகி உள்ளத "என்று யுபியின் நிர்வாக இயக்குனர் சேகர் ராமமூர்த்தி கூறினார்.
Tags: