நெஞ்செரிச்சலுக்குப் பெரும்பாலும் உணவுக் குழாய் அழற்சி தான் காரணமாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் போதும், ஆரம்ப நிலையில் உள்ள நெஞ்செரிச்சலை மிக எளிதில் குணப்படுத்தி விடலாம். 
உணவுக்குழாய் புற்றுநோய்

சாப்பிடும் போது மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். கவலையாக இருக்கும் போதோ, கோபமாக இருக்கும் போதோ சாப்பிட வேண்டாம். 

உங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களை திருப்திப் படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்கள்.
காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம். மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவு களைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். 

அவசரம் அவசரமாக சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும் போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்து விடும். பிறகு ஏப்பம் வரும். சமயங்களில் ஏப்பத்துடன் ‘அமிலக் கவளம்’ உணவு குழாய்க்குள் உந்தப் படும். 

இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகையால், உணவை நன்றாக மென்று, மிக நிதானமாக விழுங்குங்கள். சாப்பிடும் நேரத்தில் பேச வேண்டாமே!
அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள், இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, காபி, தேநீர், சாக்லெட், மது, க, வாயு நிரப்பப்பட்ட பானங்கள், கோலா பானங்கள் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், காரம், மசாலா வகைகள் போன்ற வற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.
உணவை மென்று நிதானமாக விழுங்குங்கள்

வழக்கமாக, உணவு உண்டபின் இரைப்பை விரியும். அப்போது அதன் மேல் அழுத்தம் ஏற்பட்டால் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்லும். 

இதனைத் தடுக்க சாப்பிட்ட பின் ஆடைகள், பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால் சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின் குனிந்து வேலை செய்யக் கூடாது; 
கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது; தண்டால் எடுக்கக் கூடாது.

மிக முக்கிய யோசனை இது...

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போது கூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியி லிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது. 

இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே ஒரு அடி உயரத்துக்கு மரக்கட்டைகளை வைத்தால் போதும். 

வலதுபுறமாகப் படுப்பதை விட இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
புகைப்பிடிப்பது இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் சுருக்குத்தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால் நெஞ்செரிச்சல் அதிகமாகி விடும். 
உணவுக் குழாயின் சுருக்குத்தசை

புகைப்பிடிப்பதைப் போலவே புகையிலை போடுவது, மது அருந்துவது, பான்மசாலா உபயோகிப்பது ஆகியவையும் நெஞ்செரிச்சலுக்கு ஆகாது. இவற்றையும் அறவே தவிர்த்து விடுங்கள். 

நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும். உணவுக் குழாய் புற்றுநோய் உணவுக் குழாய் அழற்சிக்கு அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்னை, 
உணவுக் குழாய் புற்றுநோய் (Cancer Oesophagus). நம் நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர வயதில் வருகின்ற புற்றுநோய்களில் உணவுக் குழாய் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது.