குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண் - ஷாக்கான மாப்பிள்ளை !

யாருங்க சொன்னது இந்த காலத்து பொண்ணுங்க எல்லாருக்கும் தங்கள் கல்யாணத்தில் வெட்கம் வரும்ன்னு.. மணமகள் டான்ஸ் ஆடி கொண்டே வந்து மணமேடையில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. 
மணமகள் டான்ஸ்


இந்த மாஸ் என்ட்ரி வீடியோ தான் வைரலாகி வருகிறது! வழக்கமாக "பொண்ணை அழைச்சிட்டு வாங்க" என்று நம்ம ஊர் ஐயர்கள் சொன்னதும், 

கல்யாண பெண்ணை நாலைந்து பேர் புடைசூழ மேடைக்கு அழைத்து வருவது வழக்கம்.. அப்போது அந்த பெண் குனிந்த தலை நிமிராமல் மண்டபத்திற்குள் நடந்து வந்து மாப்பிள்ளை பக்கத்தில் உட்காருவார்.

மணமேடையில் உட்கார்ந்த பிறகும் கூட தலையை நிமிராமல், குனிந்தபடியே வெட்கத்துடன் உட்கார்ந்திருப்பார்.. 
இதை தான் இவ்வளவு காலம் நாம நேரிலும், சினிமாவிலும் பார்த்து வந்தோம்.. இப்போது இதுவும் கடந்து போகும் என்ற ரேஞ்சுக்கு போய் விட்டது.

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் சமீபத்தில் ஒரு கல்யாணம் நடந்தது.. மணமக்கள் பெயர் வருண் - அஞ்சலி! உற்றார், உறவினர்கள், நண்பர்கள் சூழ மண்டபமே பிஸியாக இருந்தது.. 

மாப்பிள்ளை தாலி கட்ட தயாராக மேடையில் உட்கார்ந்திருந்தார். பெண்ணை அழைத்து வருவார்கள் என்று பார்த்தால், மணமகள் அஞ்சலி டான்ஸ் ஆடியபடியே வந்தார்.

ரெட் கலர் புடவை & நகை சகிதம்... உடம்பை வளைத்து பம்பரமாக சுழன்று ஆடினார்.. அவருடன் தோழிகள், சிறுவர்களும் டான்ஸ் ஆடினார்கள்.. 
குத்தாட்டம் போட்ட கல்யாண பெண்


கேரளாவில் நடந்த கல்யாணம் என்றாலும், பாட்டு என்னவோ தமிழ்பாட்டு தான்.. மணமேடை க்கு வரும் போது "மம்பட்டியான்" என்ற படத்தில் இடம் பெற்றுள்ள 

"மலையூரு நாட்டாம மனச காட்டு பூட்டாம" என்ற பாடலுக்கு தான் மணமகள் டான்ஸ் ஆடி ஒரு நடனமாடிக் கொண்டு என்ட்ரி கொடுத்துள்ளார்.
மாப்பிள்ளைக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அஞ்சலி இப்படி ஒரு ஐடியா செய்துள்ளார். மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல.. மண்டபத்தில் உட்கார்ந்திருந்த எல்லாருக்குமே இது சர்ப்ரைஸ் தான்.. 

இதை அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடவும், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது... 

இந்த மணமக்களுக்கு நெட்டிசன்கள், ட்விட்டர்வாசிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Tags:
Privacy and cookie settings