ஆண் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் கமாண்டோ படை வீரர் ஒருவர்.. விடுவார்களா நம் மக்கள்? 
பெண்ணை தொட்ட நபர்


ரவுண்டு கட்டி நடு ரோட்டிலேயே சரமாரி அடி வெளுத்து விட்டனர். சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த பெண் அவர்.. 26 வயதாகிறது..

கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்..

வேலை முடித்து விட்டு வந்த இவரை அவரது ஆண் நண்பர் பைக்கில் வீட்டில் டிராப் செய்ய கூட்டி சென்றுள்ளார்.

அசோக் பில்லர் அருகே இவர்கள் சென்ற போது, பின்னாடியே ஒரு நபர் பைக்கில் வந்துள்ளார்.. இளம் பெண்ணின் அருகில் உரசி வந்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.. 

இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத அந்த பெண் அதிர்ச்சி யடைந்து அப்போதே கூச்சல் போட்டுள்ளார்.
பெண் சத்தம் போட்டதும், பைக்கில் வந்த நபருக்கு ஒரு நிமிஷம் எதுவுமே புரிய வில்லை.. அதனால் அங்கிருந்து வேகமாக செல்ல, தன் பைக்கை ஸ்பீடாக ஓட்டினார்.. 

ஆனால் ஆண் நண்பர் விடவில்லை.. பின்னாடியே துரத்தி கொண்டு சென்றார்.. 

எம்எம்டிஏ காலனி அருகே உள்ள சிக்னலில் வந்த போது, அவரது பைக்கை, தன்னுடைய பைக்கால் மோதி கீழே தள்ளினார் ஆண் நண்பர்... இதில் கீழே தடுமாறி விழுந்தார் அந்த நபர்.


அதற்குள் பொது மக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக வெளுத்தார்.. தகவலறிந்து வடபழனி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர்.. 

அந்த இளைஞரை மீட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்கள்..

சம்பந்தப்பட்ட பெண்ணும், பாலியல் தொல்லை தந்ததாக அந்த இளைஞர் மீது புகார் தந்தார். உடனடி விசாரணை அப்போதே ஆரம்பமானது.

அவரது பெயர் முரளி கிருஷ்ணன் என்பதும், ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கமாண்டோ தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. 
பாலியல் சீண்டல் செய்த போது, முரளி கிருஷ்ணா குடிபோதையி லும் இருந்துள்ளார். கமாண்டோ வீரர் முரளி கிருஷ்ணனிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

கமாண்டோ வீரரே பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.