பெட்ரோல் ஸ்கூட்டரை ஹைப்ரிட்டாக மாற்றும் நிறுவனம் !

மின்சார ஆற்றலுக்கு ஏற்றவாறு வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 
ஹைப்ரிட் ஸ்கூட்டர்
எரிபொருள் வாகனத்தை ஹைப்ரிட் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றி தரும் நிறுவனம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

2016ம் ஆண்டு துவங்கப்பட்ட மெலாடாத் ஆட்டோ கம்பானென்ட்ஸ் என்கிற நிறுவனம்,

சராசரியான பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை எலெக்ட்ரிக் ஹைப்ரிட் பயன்பாட்டுக்கு மாற்றும் தொழில் நுட்பத்தில் சிறப்பாக விளங்குகிறது.

இந்நிறுவனத்தை தோற்றுவித்த ராகேஷ் மெலாடாத் கருணாகரன், மிக எளிய முறையில் எரிபொருள் வாகனத்தை மின்சார ஹைப்ரிட் தொழில் நுட்பத்திற்கு மாற்றும் யுக்தியை கண்டறிந்தார். 

அதை தொடர்ந்தே இந்த நிறுவனத்தை அவர் தொடங்கி யுள்ளார். கருணாகரனை பொறுத்த வரையில், புதியதாக மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறுவதை விட, 
நடப்பு எரிபொருள் வாகன பயன்பாட்டுடன் ஹைப்ரிட்டை தொழில் நுட்பத்தை தழுவது சாலச்சிறந்து என்று தெரிவிக்கிறார். 
இது எளிய வகையில், துரிதமான முறையில் பயன் தரக்கூடியது என்கிற கருத்தை அவர் வலியுறுத்து கிறார்.

அண்மையில் எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர், மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறுவது என்பது பல்வேறு சவால்கள் மிக்கது. 

எண்ணிக்கையில் அடங்காத வகையிலான வாகனங்கள் குப்பைக்குச் செல்ல வழிவகுக்கும். மின்சார ஆற்றலுக்கான தேவைகளை நாடும் போது அவற்றுக்கான செலவீனங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

உடனடியாக வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்றுவது புதிய அழுத்தத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மஹிந்திரா உயரதிகாரியின் கருத்தை ஏற்றுக் கொண்ட பெங்களூரை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும்

மெலாடாத் ஆட்டோ காம்பனென்ட்டஸ் நிறுவனம், எரிபொருள் வாகனங்களுக் கான இ-கிட் ஒன்றை உருவாக்கியது. 

இதை பெட்ரோல் ஸ்கூட்டர்களில் பொருத்துவதன் மூலம், அந்த வாகனம் ஹைப்ரிட் பயன்பாட்டுக்கு மாற வழிவகைச் செய்கிறது.
இதன்மூலம் இ-கிட் பொருத்தப்பட்ட வாகனம் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஆற்றலை ஒருசேர பெறுகிறது. 
மேலும், மெலாடாத் ஆட்டோ கம்பானென்ட்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த இ-கிட்டை பொருத்துவதற்கு வாகனங்களில் எவ்வித மாடிபிகேஷனும் செய்ய வேண்டாம். 

அதிகப் பட்சமாக 30 நிமிடங்களில் இதை பொருத்து விடலாம் என்பது கூடுதல் தகவல். சர்வதேச நாடுகளுக்கு ஏற்றவாறு பயன்படும் வகையில் இந்த இ-கிட் தயாரிக்கப் பட்டுள்ளது. 

10 அங்குல மற்றும் 12 அங்குல ஸ்டீல் சக்கரங்களை கொண்ட, எந்த ஸ்கூட்டர்களிலும் இதை பொறுத்தலாம். 

கழட்டி மாட்டும் வசதியுடன் இந்த கிட்டில் இடம் பெற்றுள்ள பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு வீட்டில் பயன் படுத்தப்படும் மின்சாரமே போதுமானது.

இதுகுறித்து கருணாகரன் பேசும் போது, இ-கிட் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

இந்த வசதி பெற்ற வாகனங்கள் அதிகப் பட்சமாக 15 சதவீதம் வரை காற்று மாசு ஏற்படுவதை தவரிக்கிறது. 

இ-சீ ஹைப்ரிட் என்ற பெயரில் உருவாக்கப் பட்டுள்ள இந்த கிட், இன்னும் தயாரிப்பு நிலையை அடைய வில்லை. 

தேசியளவில் மெலாடாத் நிறுவனத்திற் குள்ள 30 டீலர்ஷிப்புகளில் இந்த கிட் விற்பனைக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
பெட்ரோல் ஸ்கூட்டரை ஹைப்ரிட்டாக மாற்றும் நிறுவனம்
விரைவில், மெலாடாத் ஆட்டோ காம்பனென்ட்ஸ் நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது. 

முழுமையாக உள்நாட்டில் கிடைக்கும் உதிரி பாகங்களை வைத்து தயாரிக்கப் படவுள்ள இந்த ஸ்கூட்டரில் பர்ஷ்லெஸ் டி.சி (பிஎல்டிசி) எலெக்ட்ரிக் மோட்டார், 

பிஎல்டிசி மோட்டார் கண்ட்ரோலர், லித்தியம் ஐயன் பேட்டரி பேக்ஸ் மற்றும்ச் சார்ஜர் போன்றவை இடம் பெறவுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வுள்ளது.
மெலாடாத் நிறுவனத்திற்கு பல்வேறு நிறுவனங் களிடம் இருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக வால்வோ கான்ஸ்டெரக்‌ஷன் எக்யூம்மெண்ட் இந்தியா நிறுவனம், ஆதரவு கரம் நீட்டியுள்ளது. 

இந்த தொழில் நுட்பத்திற்கான உருவாக்க பணிகளில் இவ்விரு நிறுவனங்களும் கைகோர்க்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags: