​பால், ஐஸ்கிரீம்களின் தரத்தை நெறிப்படுத்தும் திட்டம் !

0
சுவைக் கூட்டப்பட்ட பால் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளின் தரம் குறித்து புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
​பால், ஐஸ்கிரீம்களின் தரம்


மேகி நூடுல்ஸில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன உப்பு, காரீயம் ஆகியவை குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக கலக்கப் பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை யடுத்து, மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாலில், மெலமின் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பது தெரிய வந்தது. 

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவை கூட்டப்பட்ட பால் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளை நெறிப்படுத்த புதிய கொள்கை களை வகுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதே போல், பன்னீர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக் கான தரத்துக்கும் நெறிமுறைகள் வகுக்கப்படும் என இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)