இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கை களால் சில வினோதமான பழக்க வழக்கங்களை மேற்கொள்வ துண்டு. அதில் சில மக்கள் மத்தியில் ஆச்சரிய த்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர், கடந்த 30 வருடங்களாக மணமகள் கோலத்தில் வலம் வருகிறார்.
அதற்கு அவர் தெரிவிக்கும் காரணங்களோ சற்று வியப்பை ஏற்படுத்துகிறது.
அதற்கு அவர் தெரிவிக்கும் காரணங்களோ சற்று வியப்பை ஏற்படுத்துகிறது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்தவர் சிந்தாகரன் சவுகான்.
அவருக்கு, அவரது பெற்றோர், 14 வயதில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவரது மனைவி, திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே உயிரிழந் துள்ளார்.
அவருக்கு, அவரது பெற்றோர், 14 வயதில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவரது மனைவி, திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே உயிரிழந் துள்ளார்.
அதனை அடுத்து, தனது 21வது வயதில், வேலைக்கு சென்ற இடத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஆனால், அவரது பெற்றோருக்கு அந்த திருமணத்தில் சம்மதம் இல்லாததால், அந்த பெண்ணை விட்டு விட்டு தன் சொந்த ஊருக்கே வந்துள்ளார். ஆனால் சவுகானை பிரிந்த அவரது 2வது மனைவி, அந்த துக்கம் தாங்க முடியாமல் உயிரிழந் துள்ளார்.
2வது மனைவி உயிரிழந்த விவகாரம் சவுகானுக்கு தெரிய வந்தது. ஆனால், அவரது பெற்றோர் வற்புறுத்திய தால் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணம் முடிந்த சில மாதத்திற் குள்ளாகவே சவுகானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அது மட்டுமல்லாமல், அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என குடும்பத்தினர் அடுத்தடுத்து உயிரிழக்க தொடங்கி யுள்ளனர்.
இதனால் கவலை அடைந்த சவுகான் செய்வதறியாது திகைத்திருந்த போது, அவரது 2வது மனைவி சவுகானின் கனவில் வந்து,
இனிமேல் மணமகள் கோலத்திலேயே வலம் வரவேண்டும் எனவும் அப்படி செய்தால் குடும்பத்தில் இனி யாரும் உயிரிழக்க மாட்டார்கள் எனவும் தெரிவித் துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சவுகான், மணமகள் கோலத்திலேயே தனது ஊரில் நடமாடி வந்துள்ளார். முதலில் தன் கோலத்தை பார்த்து கேலி செய்த கிராமத்தினர்
பின்னர் தன் கதையை கேட்டு பரிதாபத்தோடு பார்க்கிறார்கள் எனவும் தன்னுடைய இந்த கோலத்திற்கு பிறகு தன் குடும்பத்தினர் உயிரிழக்காமல் இருப்பதாகவும் தன் உடல்நலம் நல்ல முன்னேற்ற மடைகிறது எனவும் தெரிவித்தார்.
இதனை பலர் மூடநம்பிக்கை என விமர்சித்து வரும் நிலையில், இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.


Thanks for Your Comments