ஜப்பானில் புல்லட் ரயில்களின் சேவையை நிறுத்திய நத்தை !

0
ஜப்பானில் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கு காரணம் ஒரு நத்தை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
புல்லட் ரயில்களின் சேவையை நிறுத்திய நத்தை
ஜப்பானில், கடந்த மே 30ம் தேதி மின்சார கோளாறு காரணமாக, 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 

அதற்கு காரணம் ஒரு நத்தை என்ற அதிர்ச்சித் தகவலை, சம்பந்தப்பட்ட புல்லட் ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் வெளியிட் டுள்ளனர்.

ஜப்பான் புல்லட் ரயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னு தாரணமாக திகழ்ந்து வருகின்றன.

நிலநடுக்கம் போன்ற கடுமையான இயற்கை சீற்றங்களில், கூட புல்லட் ரயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப் படாது.

மேலும், அந்நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து மார்க்கமாகவும் புல்லட் ரயில்கள் இருக்கின்றன. 

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி தெற்கு ஜப்பானில், புல்லட் ரயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப் பட்டது.

இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்கு ஆளாகினர். 
இந்த சம்பவம் நிகழ்ந்த சில நாட்களில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த புல்லட் ரயில் ஊழியர்கள்,

ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் இருந்து நத்தை ஒன்றை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் கருவியை கடக்க முயன்ற போது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்திருக்க லாம் என்றும், அதன் காரணமாகவே,

கடந்த 30ம் தேதி புல்லட் ரயில் கோளாறு ஏற்பட்டிரு க்கலாம் என்றும் புல்லட் ரயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்க மளித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings