மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவர் !

0
போதையில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள் ஏற்படுத்தும் விபத்துக் களால், பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அப்படி ஒரு கோரமான விபத்து கோவையில் மரணத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. 
சடலத்தோடு போராடிய மருத்துவர்


அந்த மரணம் ஒரு டாஸ்மாக் கடையையும் மூட வைத்திருக்கிறது. கால ஓட்டத்தில், இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் வெகுசிலரே. 

அவர்களில் ஒருவர் தான் கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இயற்கையின் மீது தீராத காதல் கொண்ட இவர், மருத்துவம் படித்தவர். 

மருத்துவத்தை தொழிலாக செய்யாமல், சேவையாக செய்து வரும் அவரது வாழ்வில், போதை இளைஞர் களால் இருள் சூழ்ந்துள்ளது. 

ஆனை கட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சாந்தலா தேவியை அழைத்துக் கொண்டு, ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஜம்புகண்டி என்ற இடத்தில் வந்த போது, மது போதையில் அதிவேகத்தில் வந்த இளைஞர் களின் இருசக்கர வாகனம், ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஷோபனா சம்பவ இடத்திலே பலியானார். 

அவரது மகள் சாந்தலாதேவி பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அன்பான மனைவி இறந்ததை அறிந்து பதறிபோய், சம்பவ இடத்திற்கு ஓடினார் மருத்துவர் ரமேஷ். 

மனைவியின் உடலைப் பார்த்து கதறிய அவர், அந்த இடத்திலேயே தமது மனைவியின் உடலுடன், தன்னந் தனியாய் போராட்டத்தை தொடங்கினார்.

"டாஸ்மாக்கிற்கு என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்” என்ற கண்ணீர் கோரிக்கை யுடன், அந்த பகுதியி லிருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென வலியுறுத்தினார். 

அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் திரண்டனர். ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தால் அந்தக் கடை தற்காலிக மாக மூடப்பட்டது. 


நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித் துள்ளனர்.

மனைவியின் சடலத்துடன் போராட்டம்

கடல் சார் ஆராய்ச்சிகள், பல் உயிர் அறிதல் ஆராய்ச்சி என பல ஆராய்ச்சி களிலும்,

பல போராட்டங்களில் மக்களுக்கு ஆதரவாகவும் களமிறங்கிய மருத்துவர் ரமேஷ், போதை இளைஞர் களால் மனைவியை இழந்து நிற்கிறார். 

வெறும் 30 ரூபாய் கட்டணத்தில் பழங்குடி மக்களுக் காக மருத்துவ சேவை ஆற்றி வந்த அவர், பழங்குடியின மக்களின் முறைப்படி, விபத்து நடந்த ஜம்புகண்டி பகுதியிலேயே தமது மனைவியின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

மனைவி இறந்து போனதை பற்றி சிந்திக்காமல், மகள் மருத்துவ மனையில் இருப்பதை பற்றிக் கூட யோசிக்காமல், சமூகத்துக் காக போராடிய மருத்துவர் ரமேஷின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings