அரக்கோணத்தில் தரைமட்டமான 2 மாடி கட்டடம் சிக்கிய இளைஞர் !

0
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்குச் சொந்தமாக, அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஆயர்பாடி கிராமத்தில், இரண்டு மாடி வீட்டு கட்டடம் உள்ளது. 
அரக்கோணத்தில் தரைமட்டமான 2 மாடி கட்டடம்


இதில், சேகர் என்பவர் தன் மனைவி ஈஸ்வரி, மகன் நரேஷுடன் (26) மேல் தளத்தில் வாடகைக்கு இருந்தார்.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழைக்கு, இந்த அடுக்குமாடி வீடு தளர்ந்திருந்தது. 

இதனை அவர்கள் கவனிக்க வில்லை. இந்த நிலையில், சேகரும், அவரது மனைவியும் வெளியூர் சென்றனர்.

மகன் நரேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இடை விடாமல் பெய்த கனமழை அதிகாலை வரை நீடித்தது.

வீட்டு படுக்கை அறையில் நரேஷ் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென இரண்டு மாடிக் கட்டடமும் இடிந்து விழுந்து தரை மட்டமானது. 

இடிபாடுகளில் சிக்கிய நரேஷ் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார். வீடு இடிந்த அதிர்வை உணர்ந்த அக்கம், பக்கத்தினர் தூக்கத்தி லிருந்து திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்தனர்.

அபயக்குரல் எழுப்பிய நரேஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அது முடியாமல் போனதால், தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து நரேஷை உயிருடன் மீட்டனர்.


108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து, நெமிலி வருவாய் துறையினரும், அவலூர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதமோ, சட்டம் -ஒழுங்கு பாதிப்போ இல்லை என ஆயர்பாடி கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி கூறி யிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. 

இரண்டு நாட்களில், இடை விடாமல் பெய்த கனமழைக்கு மாவட்டம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந் திருப்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)