அயோத்தி வழக்கின் முழு விவரம் !

0
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி உள்ளது. ஆனால் அந்த மசூதி இருந்த பகுதியில் தான் ராமர் பிறந்தார் என்று ராமஜென்ம பூமி இயக்கத் தினரும், விஷ்வ இந்து பரிசத் அமைப்பினரும் கூறி வருகிறார்கள். 
அயோத்தி வழக்கு


இதை யடுத்து அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்துக் களுக்கும், இஸ்லாமியர் களுக்கும் சுமார் 70 ஆண்டு களாக சர்ச்சை நீடித்து வந்தது.

குறிப்பாக அயோத்தியில் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்துள்ள பகுதியில் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பதில் தான் சர்ச்சை ஏற்பட்டது.

2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

அந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடி நிர்மோகி அஹாரா, சன்னி வக்பு வாரியம், ராம்லல்லா ஆகிய 3 அமைப்பும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த நிலையில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியிட்டது. 

சர்ச்சைக் குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகளும் சரி சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பை எந்த அமைப்பும் ஏற்றுக் கொள்ள வில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீடுகள்

சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறை யீடுகள் தாக்கல் செய்யப் பட்டன. கடந்த 9 ஆண்டுகளாக அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீடுகள்


இதற்கிடையே சர்ச்சையை சுமூகமாக தீர்த்து கொள்ள இந்து அமைப்பு களுக்கும், இஸ்லாமிய அமைப்பு களுக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. 

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர், பிரபல வக்கீல் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அந்த சமரச பேச்சு வார்த்தையை நடத்தியது.

தினசரி விசாரணை நடத்தி தீர்ப்பு

ஆனால் அந்த சமரச பேச்சு வார்த்தை வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து தினசரி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி அயோத்தி வழக்கின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. 40 நாட்கள் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப் பட்டது. 
தினசரி விசாரணை நடத்தி தீர்ப்பு


கடந்த மாதம் 16-ந் தேதி அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றன.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கொண்டாடிய அமைப்பு களின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. 

இவை அனைத்தையும் அடிப்படை யாக வைத்து நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பாப்டே, சந்திரசூட், அசோக் பூசன், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளும் தீர்ப்பு எழுதினார்கள்.

அந்த தீர்ப்பு விவரங்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (சனிக்கிழமை) 10.30 மணிக்கு வெளியிட்டது. 

தீர்ப்பை கேட்பதற் காக மூத்த வக்கீல்கள் பராசரன், வைத்தியநாதன், ராஜுவ் தவான், மத்திய அரசு வக்கீல் தஸ்கர் மேத்தா உள்பட ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறியதாவது:-

நாங்கள் 5 நீதிபதிகளும் ஒருமித்த ஒரே தீர்ப்பை வழங்க இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. அயோத்தி விவகாரத்தில் நாங்கள் எடுத்துள்ள முடிவு ஏகோபித்த ஒரு மனதான முடிவாகும்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்


அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும். எனவே சன்னி அமைப்புக்கு எதிராக ஷியா அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இந்த தீர்ப்பை வாசித்து முடிக்க சுமார் 30 நிமிடம் ஆகலாம். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது.

அமைதியை காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மையே அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்பாகும். எனவே நடுநிலையை காக்கும் பொறுப்பில் நீதிமன்றம் உள்ளது. அதற்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நிர்மோகி அஹாரா என்ற அமைப்பு ஆதாரங்களை காட்ட வில்லை. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அந்த அமைப்பு வழிபாடு செய்வதற்கான எந்த அதிகாரத்தையும் பெற்றதாக தெரிய வில்லை. ஆனால் இந்துக்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபாடு நடத்தியதற் கான ஆதாரம் இருக்கிறது. 

என்றாலும் அந்த அமைப்பு வழிபாடு தொடர்பாக உறுதியான தகவலை தரவில்லை. மதங்களு க்குள் இருக்கும் உரிமையை சுப்ரீம் கோர்ட்டு மதிக்கிறது.

அயோத்தியில் ராமர் பிறந்தார்

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் அந்த இடத்தை முஸ்லிம்கள் பாபர் மசூதி என்று அழைக்கி றார்கள். 
அயோத்தியில் ராமர் பிறந்தார்


ஆனால் ஒரு இடத்தின் உரிமையை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு முடிவு செய்ய முடியாது.

1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்க வில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதே சமயத்தில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது இடம் தான் என்பதை இஸ்லாமிய அமைப்புகளால் நிரூபிக்க இயலவில்லை.

பாபர் மசூதி இடிக்கப் பட்டது

1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்டது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயலாகும். 

அதை ஒரு போதும் ஏற்க இயலாது. இது தொடர்பாக அலகாபாத் கோர்ட்டில் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏற்புடையது அல்ல.
பாபர் மசூதி இடிக்கப் பட்டது


சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது தவறாகும்.

3 அமைப் புகளும் முழுமையான ஆவணங்களை தரவில்லை.

சர்ச்சைக்குரிய நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய நிர்மோகி அஹாரா அமைப்பு தேவையான ஆவணங் களை தரவில்லை. எனவே அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. 

அதற்கு பதில் ராம்லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மேலும் இஸ்லாமிய அமைப்புகளில் ஷியா அமைப்பின் கோரிக்கையை ஏற்க இயலாது. அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.

மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும்

சன்னி வக்பு வாரியத்தின் மனு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும். அந்த நிலத்தின் உரிமையும், பராமரிப்பு உரிமையும் மத்திய அரசு வசமே இருக்கும்.

அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப் படுகிறது. மத்திய அரசு அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும். 
மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும்


அந்த அறக்கட்டளை ராம ஜென்ம பூமி அமைப்பின் மூலம் செயல் படுத்தப்பட வேண்டும்.

ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை ராம்லல்லா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த நிர்வாக அமைப்பில் நிர்மோகி அஹாரா அமைப்புக்கும் ஒரு பிரதிநிதித் துவத்தை வழங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

முஸ்லிம்கள் புதிய மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். 

சன்னி வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கரில் அந்த மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு களை மத்திய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் செயல்படுத்த வேண்டும். 

3 மாதம் இதற்காக இரு அரசு களுக்கும் அவகாசம் வழங்கப் படுகிறது. அதற்குள் மத்திய அரசு சர்ச்சைக்குரிய இடத்தை சரி செய்து வழங்க வேண்டும்.

அயோத்தி நிலம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசும், உத்தர பிரதேச மாநில அரசும் ஒருங்கிணைந்து அதிகாரி களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings