சுஜித் உடலைக் காட்டாதது ஏன்? சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன் !

0
திருச்சி, மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப் பட்டியில் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித், நான்கு நாள் தொடர் மீட்புப் போராட்டம் தோல்வி யடைந்ததால் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப் பட்டான். 
ராதாகிருஷ்ணன்


அவனது இறப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த கேள்வி களுக்குத் தமிழக வருவாய் துறை ஆணையர் ராதா கிருஷ்ணன் பதிலளித் துள்ளார்.

சுஜித்

சென்னை எழிலகத்தில் இன்று காலை செய்தி யாளர்களைச் சந்தித்த ராதா கிருஷ்ணன், தமிழகத்தில் எடுக்கப் பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைப் பற்றி விளக்க மளித்தார். 

அப்போது அவரிடம் சுஜித் மீட்புப் பணி குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``சுஜித் மீட்புப் பணிகளில் நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம். 

அவனது மீட்புப் பணி இப்படி நடந்திருக் கலாம் எனப் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

சுஜித்தை மீட்கும் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார், தன்னார் வலர்கள், வருவாய் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என 600 பேர் இணைந்து செயல்பட்டோம். 

ஆனால், துரதிர்ஷ்ட வசமாகச் சிறுவன் இறந்து விட்டான். இறந்தவர் களை எப்படி மீட்க வேண்டும் என்று ஒரு வழிகாட்டுதல் உள்ளது. அதைப் பின்பற்றியே சுஜித்தின் உடலை நாங்கள் வெளியில் எடுத்தோம்.

மீட்புப் பணி
சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?


அதே போன்று அழுகிய உடலை எப்படி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும், அதற்கான நடைமுறைகள், கைரேகைகள் போன்ற அனைத்து நடவடிக்கை களையும் மருத்துவர்கள் மேற் கொண்டனர். 

களத்தி லிருந்த அனைவரும் எப்படியாவது சுஜித்தைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் போராடினோம்.

சுஜித் இறப்பு உங்களை விடக் களத்தி லிருந்து நேரில் பார்த்த எங்களுக்கு அதிக வேதனை யாக இருந்தது.

ஆனால், சுஜித் மீட்புப் பணியில் அங்கிருந்த களப்பணி யாளர்கள் இவ்வளவு கடுமையாக உழைத்தும் விமர்சிக்கப் படுகிறார்கள். 

கும்பகோணம் தீவிபத்தின் போதும், இறந்த குழந்தை களை மீட்கும் பணிகளில் நான் இருந்தேன். அப்போது குழந்தைகளின் சடலங்களை வெளிப்படை யாகக் காட்டியதற் காக கடும் விமர்சனங் களைச் சந்தித்தி ருந்தோம். 

அதன் பிறகுதான், இறந்தவர்களின் உடலை மீட்கும் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியது. சுஜித் விஷயத்திலும் அந்த வழி காட்டுதலையே நாங்கள் பின் பற்றினோம்.

ராதா கிருஷ்ணன்

மீட்புப் பணிகள் நடந்த ஒவ்வொரு நொடியும் சுஜித்தின் பெற்றோர் எங்களுடன் இருந்தனர். மீட்புப் பணி குறித்த அனைத்து விவரங் களையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டே இருந்தோம். 

சுஜித்தை மீட்க இந்திய அளவில் உள்ள அனைத்து உயர்தர இயந்திரங் களையும் நாங்கள் பயன் படுத்தினோம். புவியியல் வல்லுநர்களும் எங்களுடன் இணைந்து செயல் பட்டனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எங்களால் ரன்னிங் கமென்டரி கூறிக் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் வதந்திகள் பரவி வருகின்றன. 
பொய்யான பல தகவல்கள்


மனிதர்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் சுஜித் மீட்புப் பணிகளில் முன்னெடுக்கப் பட்டது.

அந்த மீட்பு நடவடிக்கை களுக்கு 11 கோடி ரூபாய் செலவான தாகப் பரவி வரும் தகவல்களும் பொய்யானவை. 

மீட்புப் பணிகளுக்கு ஆகும் செலவுகளை அரசு எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. 
மீட்பு நடவடிக்கை களுக்கு 11 கோடி ரூபாய் செலவான தாகப் பரவி வரும் தகவல்களும் பொய்யானவை. மீட்புப் பணிகளுக்கு ஆகும் செலவுகளை அரசு எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன்.
இது போன்ற பொய்யான பல தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். மக்கள் அதிகார பூர்வமாக வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். 

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறு களையும் மூட வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே கோரிக்கை. மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றார் உறுதியான குரலில்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)