வருகிறது அயோத்தி தீர்ப்பு? உளவுத்துறைக்கு உத்தரவு !

0
இந்தியாவே எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய அயோத்தி கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருகிறது அயோத்தி தீர்ப்பு?


அயோத்தி

பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப் பட்டது. அதன்பிறகு நிலத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. 

இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ``அயோத்தியில் சர்ச்சைக் குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். 

மூன்றில் ஒருபகுதி ராம் லல்லா அமைப்புக்கும், மற்றொரு பகுதி சன்னி வக்ஃபு வாரியத்து க்கும், மூன்றாவது பகுதி நிர்மோஹி அகாரா அமைப்புக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். 

இந்தத் தீர்ப்பை இஸ்லாமியர் களும் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்து அமைப்புகளும் ஏற்றுக் கொள்ள வில்லை. உயர் நீதிமன்றத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. 

சுமார் 14 அமைப்புகள் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தக் குழு ஒன்றை அமைத்தனர். 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலையில் இந்த மத்தியஸ்தக் குழு இரு தரப்புடனும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப் படாமல் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

உச்சநீதிமன்றம்
உளவுத்துறை


இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது. 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், சந்திர சூட், அப்துல் நஸீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினமும் விசாரணை செய்தது. 

மேல் முறையீடு செய்தவர் களின் வழக்கறிஞர்கள் காரசார விவாதம் உச்ச நீதிமன்றத்தில் தினமும் நடந்தேறியது. கடந்த 17-ம் தேதியோடு இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நிறை வடைந்து விட்டது. 

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்கிறார்கள். இறுதிக் கட்ட விசாரணை முடிந்த பிறகு அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது.

`க்ளைமாக்ஸ்' நோக்கி அயோத்தி... `யோகிக்கு எப்படித் தெரியும்?'

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்பாக வழக்கின் தீ்ரப்பை வழங்குவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது. 

மத்திய உள்துறை அமைச்சகமும் இது குறித்து முன்னேற்பாடு களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உளவுத் துறையின் சார்பில் அனைத்து மாநில காவல் துறைக்கும் ஒரு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது. 

அதில், `அடுத்த வாரம் இறுதியில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தத் தீர்ப்பினால் கொந்தளிப்பு ஏற்படும் நிலை இருக்கலாம். 

எனவே அதற்கான முன்னேற் பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட் டுள்ளார்கள். 

குறிப்பாக இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் செயல் பாடுகளைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்


ஐந்து நீதிபதிகளும் தனித்தனி யாக தங்கள் தீர்ப்பை அன்று வாசிப்பார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்றம் 1-ல் இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட உள்ளது. 

ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், ``நாங்கள் மகிழும் வகையில் இந்தத் தீர்ப்பு இருக்கும்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக இருப்பதாக உளவுத்துறை உஷார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings