ஆபத்தான ஆழ்துளைக் கிணறு - களமிறங்கிய புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் !

0
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியில் தன்னுடைய வீட்டுக்கு அருகே இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் பரிதாபமாக உயிரிழந்தான். 
ஆபத்தான ஆழ்துளைக் கிணறு


4 நாள்கள் தொடர் மீட்புப் பணிகள் தோல்வி யடைந்து, கடைசியாகச் சடலமாக மீட்கப் பட்டான். 

இனி, இது போன்ற சம்பவங்கள் இனி நடந்து விடக் கூடாது என்பதற் காக, தமிழகம் முழுவதும் மூடப்படாமல்,

இருக்கும் ஆபத்தான ஆழ்துளைக் கிணறு களை அரசு அலுவலர்கள் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி யுள்ளது.

இதனிடையே, சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார் வலர்கள் பலரும் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைத் தற்காலிக மாக மூடி வருகின்றனர். 

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் ஆய்வாளர் பரத் சீனிவாசன் கடந்த 2 நாள்களா கவே வடகாடு மற்றும் 

அதன் சுற்று வட்டார கிராமங் களுக்கு நேரடியாகச் சென்று, ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு களைக் கண்டு பிடிக்கிறார்.

காவல் ஆய்வாளர் பரத் சீனிவாசனிடம் பேசினோம், "சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அடுத்த நாளே வடகாடு அருகே அணவயல் அரசுப் பள்ளிக்கு அருகே மூடப்படாமல், ஆபத்தான நிலையில் ஒரு ஆழ்துளைக் கிணறு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தேன். 

மாணவர்கள் விளையாடும் மைதானத் துக்கு அருகேயே அந்த ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருந்துச்சு. உடனே அந்தப் பகுதி இளைஞர்களின் உதவியோடு தற்காலிக மாக மூடி விட்டோம்.
இளைஞர்கள் உதவியோட கிணறுகளை மூடுவோம்


அதுக்கப்புறம், அந்த ஊர் ஊராட்சி அலுவலர் கிட்ட சொல்லி இருக்கோம். பள்ளிக் கூடத்துக்கு பக்கத்துல இந்த ஆழ்துளைக் கிணறு ரொம்ப நாளா இருந்திருக்கு. 

இது வரைக்கும் யாருக்கும் ஆபத்து இல்லை. இனி வந்திரக் கூடாதுல்ல, அதனால, தான் உடனே மூட நடவடிக்கை எடுத்தேன். 

அப்பத்தான், வடகாட்டுக்கு பக்கத்துல இருக்க கிராமத்துக்கு எல்லாம் போய் இளைஞர்கள் உதவியோட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவோம்னு முடிவு பண்ணேன்.

அதன்படியே, நிறைய ஆழ்துளைக் கிணறுகள் திறந்த நிலையி லிருந்தன. 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைத் தற்காலிக மாக மூடியுள்ளோம். இந்தக் கிராமங்களில் ஆபத்தான நிலையில் சில கிணறுகளும் இருக்கு. 

அவற்றையும் மூட உள்ளூர் ஊராட்சி அதிகாரிகள் கிட்டயும் அரசியல் வாதிகள் கிட்டயும் சொல்லி இருக்கேன். தொடர்ந்து, இதைக் கண்காணிக் கவும் உள்ளேன்" என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)