உணவு தாமதமாக பரிமாறப் பட்டதால் ஆத்திர மடைந்த வாடிக்கையாளர் வெயிட்டரை சுட்டுக் கொன்றது பிரான்ஸ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
வெயிட்டரை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்


பிரான்ஸ் நாட்டில் "நாய்ஸி லீ கிரேண்ட்" ("Noisy Le Grand") எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு நிறைய உணவகங்கள் உள்ளன. 

நேற்று இப்பகுதியில் "பீட்சா மற்றும் சாண்ட்விச்" உணவகத்திற்கு வாடிக்கை யாளர் ஒருவர் வந்துள்ளார். அங்கு அவர் சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார். 

ஆர்டரை எடுத்துக் கொண்ட வெயிட்டர் சான்விட்சை வழங்கு வதற்கு வெகு நேரமாக்கி யுள்ளார். உணவை எடுத்து வந்து கொடுத்த போதும் வாடிக்கை யாளருக்கு கோபம் தீரவில்லை. 

அந்த வெயிட்டரை சரமாரியாக திட்டி யுள்ளார். ஆத்திரம் தலைக்கேறிய தால் செய்வதறியாது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வெயிட்டரை சுட்டு தள்ளியுள்ளார்.


சுட்ட உடனே வாடிக்கை யாளர் உணவகத்தில் இருந்து மாயமானார். உணவகத்தில் இருந்தோர் குண்டடிபட்ட வெயிட்டரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி யுள்ளனர். இந்த நிகழ்வு குறித்த தகவலை உணவகத்தின் அப்பகுதி காவல் நிலையத்தில் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.