நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலைகள் !

நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலைகள் !

0
நாளமில்லாச் சுரப்பி மண்டலம் உடற்செயலியல் நிகடிநவுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும். 
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலைகள் !


நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வளர்ச்சி, இனப்பெருக்கம், வாடிநவைத் தொடர்ந்து பேணுதல் முதலிய இயற்செயல்களைக் கட்டுப் படுத்தவும், ஒருங்கிணைக்கவும் செய்கிறது.

நாளமில்லாச் சுரப்பு மண்டலம் நாளமில்லாச் சுரப்பிகளையும் அவற்றின் ஹார்மோன் களையும் உள்ளடக்கியது ஆகும். எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தில் உள்ள சுரப்பிகளு க்கும் நாளங்கள் இல்லை. 

அவை சுரக்கும் பொருள்களுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன்கள் உற்பத்தி யாகும் இடங்களி லிருந்து செயலாற்றும் இடங்களுக்கு இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப் படுகின்றன.

ஒன்றுக் கொன்று தொடர்பின்றிப் பல்வேறு இடங்களில் காணப் படுகின்றன. மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் காணப்படும் பகுதிகள் பின் வருமாறு அமைந்துள்ளன.

தலை

அ) பிட்யூட்டரி சுரப்பி

ஆ) பினியல் சுரப்பி

கழுத்து

அ) தைராய்டு சுரப்பி

ஆ) பாராதைராய்டு சுரப்பி

மார்பு 

அ) தைமஸ் சுரப்பி

வயிற்றுப்பகுதி

அ) கணையம் - லாங்கர் ஹான் திட்டுக்கள்

ஆ) அட்ரீனல் சுரப்பி - அட்ரீனல் கார்டெக்ஸ், அட்ரீனல் மெடுல்லா

இ) இனப்பெருக்கச் சுரப்பிகள்

ஆண்களில் விந்தகம், பெண்களில் அண்டச் சுரப்பி ஹார்மோன்கள்: வேதியியல் அடிப்படையில் ஹார்மோன்கள் புரதங்க ளாகவோ அல்லது ஸ்டீராய்டுக ளாகவோ உள்ளன. ஹார்மோன்கள் மிகக்குறைந்த அளவே சுரந்தாலும் செயல் திறனுள்ளவை யாக உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பி: 
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலைகள் !


பட்டாணி அளவே உள்ள பிட்யூட்டரி சுரப்பி மூளையின் ஹைப்போ தலாமஸோடு இணைந்துள்ளது. நாளமில்லாச் சுரப்பிகளைப் பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்கு படுத்துவதால், நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என இதை அழைக்கலாம்.

பிட்யூட்டரி சுரப்பியின் கதுப்புகள்: 

பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பாக, அடினோ ஹைபோ பைசிஸ் மற்றும் பின் கதுப்பாக நியூரோ ஹைபோ பைசிஸ்  மைந்துள்ளன.

தைராடீநுடு சுரப்பி : 

கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இரு புறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உடைய அமைப்பே தைராடீநுடு சுரப்பி ஆகும். இது தைராக்ஸின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இதில் டைரோசினும் (அமினோ அமிலம்), அயோடினும் உள்ளன.

தைராக்ஸினின் பணிகள்

•• வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.

•• உடலின் வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுகிறது.

•• திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைதலை ஊக்கு விக்கிறது.

•• உடல் வளர்ச்சியை மறைமுக மாகப் பாதிப்பதால் இஃது ஆளுமை ஹார்மோன் எனவும் அழைக்கப் படுகிறது.

•• இரத்தத்தில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்கு படுத்துகிறது.

•• சிறுநீரகச் செயல் பாட்டையும், சிறுநீர்ப் போக்கையும் கட்டுப் படுத்துகிறது.

தைராடய்டின் குறைபாடுகள்

1. ஹைபோ தைராய்டிஸம் : 

தைராக்ஸினின் குறை சுரப்பு, எளிய காய்டர், மிக்ஸிடிமா, கிரிட்டினிஸம் முதலிய குறைபாடுகளை உண்டாக்குகிறது.

அ) எளிய காய்டர் : 

(முன் கழுத்துக் கழலை) உணவில் அயோடின் பற்றாக்குறையினால் இஃது ஏற்படுகிறது. கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பி வீங்கிக் காணப்படும் நிலை, காடீநுடர் எனப்படும்.

ஆ) மிக்ஸிடிமா: 

இக்குறைபாடு பெரியவர்களில் தோன்றுகிறது. 

இதன் அறிகுறிகளாவன : 

குறைந்த வளர்சிதை மாற்றவீதம், உடலளவிலும், மனத்தளவிலும் தளர்ச்சி யுற்றுக் காணப்படுதல், எடை கூடுதல், தோல் கடினமாதல், குறைவான இதயத்துடிப்பு, மனச்சோர்வு.
இ) கிரிட்டினிசம் : 

இது சிறியவர்களில் தோன்றும். இதன் அறிகுறிகள் குள்ளத்தன்மை, குன்றிய மனவளர்ச்சி, குறைபாடுடைய பற்கள், துருத்திய நாக்கு, தளர்வான தோல் முதலியன ஆகும்.

2. ஹைபர் தைராடீநுடிஸம் : 

தைராக்ஸினின் மிகைச் சுரப்பு எக்சோஃப்தால்மிக் காய்டர் அல்லது கிரேவின் நோய்க்குக் காரணமாகிறது. 

இதன் அறிகுறிகளாவன: 

மிகையான வளர்சிதை மாற்ற வீதம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, அதிகமாக வியர்த்தல், எடை குறைதல், களைப்படைதல், பிதுங்கிய கண்கள் போன்றவை ஆகும். 

லாங்கர்ஹான் திட்டுக்கள்: 

கணையம் நாளமுள்ள, நாளமில்லாச் சுரப்பியாக இருவழிகளில் செயல் படுகிறது. கணையத்தின் நாளமில்லாச் சுரப்பிப் பகுதியாக லாங்கர்ஹான் திட்டுக்கள் உள்ளன. 
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலைகள் !


இதில் ஆல்பா, பீட்டா என்ற இருவகைச் செல்கள் காணப் படுகின்றன. ஆல்பா செல்கள் குளுக்கோகான் ஹார்மோனை யும் பீட்டா செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனை யும் சுரக்கின்றன.

இன்சுலின்

♦ இன்சுலின் திசு ஆக்ஸி கரணத்திற் காக, செல்கள் குளுக்கோஸை எடுத்துக்
கொள்வதை ஊக்கு விக்கிறது.

♦ இது குளுக்கோஸைக் கிளைகோஜனாக மாற்றிக் கல்லீரலிலும், தசைகளி லும் சேமித்து வைக்கிறது.

♦புரதம், கொழுப்புப் பொருள்களி லிருந்து குளுக்கோஸ் உருவாதலைத் தடுக்கிறது. 

டயாபடீஸ் மெலிடஸ்: 

இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் டயாபடீஸ் மெலிடஸ் தோன்றுகிறது.  இரத்தத்தில் காணப்படும் அதிகப் படியான, பயன்படுத்தாத குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப் படுகிறது. 

குளுக்கோகான்: 

இஃது இரத்தத்தில் சர்க்கரை யின் அளவு குறையும் போது சுரக்கிறது. கிளை கோஜனைக் குளுக்கோஸாக மாற்ற மடைவதைத் தூண்டி இரத்தச் சர்க்கரை அளவை உயர்த்துகிறது. 

இயல்பான இரத்தச் சர்க்கரை அளவான 80 – 120 மி.கி. / டெசி.லி. இரத்தம் என்ற நிலையைப் பராமரிக்க இரத்தத்தில் சமஅளவு இன்சுலினும், குளுக்கோகா னும் இருக்க வேண்டும். 
அட்ரீனல் சுரப்பி: 

ஒவ்வொரு சிறு நீரகத்தின் மீதும் அட்ரீனல் சுரப்பி அமைந்துள்ளது. இது கார்டெக்ஸ் என்னும் புறப்பகுதியை யும், அட்ரீனல் மெடுல்லா என்னும் உட்புறப் பகுதியையும் கொண்டுள்ளது. 

அட்ரீனல் கார்டெக்ஸ்: 

இதில் ஆல்டோஸ் டீரோன், கார்டிஸோன் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. 

ஆல்டோஸ்டீரோன் (தாது கலந்த கார்டிகாடீநுடு): 

இது நீர், சோடியம் மீண்டும் உறிஞ்சப் படுதலை ஊக்கு விப்பதால் பொட்டாசியம், பாஸ்பேட் அயனிகளைக் கழிவு நீக்கம் செய்தல், தாது உப்புகளின் வளர்சிதை மாற்றத்தைப் பராமரித்தல் ஆகிய பணிகளைச் செடீநுகிறது. 

மேலும் மின் பகுளிகளான எலக்ட்ரோ லைட்டுகளின் சமநிலை, உடல்திரவ அடர்த்தி, சவ்வூடு பரவல் அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற வற்றைப் பராமரிக்கிறது. 

கார்டிஸோன் (குளுக்கோ கார்டிகாய்டு): 

கிளை கோஜனைக் குளுக்கோஸாகச் சிதைவடையச் செடீநுதலைத் தூண்டி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது.
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலைகள் !


மேலும், இஃது அழற்சித் தடுப்பு வினைகளைத் தோற்றுவித்து நோய்த்தடைக் காப்புத் துலங்கலை மட்டுப் படுத்துகிறது.

அட்ரீனல் மெடுல்லா: 

அட்ரீனல் மெடுல்லா உருமாறிய நரம்பு புறப்படைச் செல்களால் ஆனது. இஃது இரண்டு ஹார்மோன் களைச் சுரக்கிறது. அவை அட்ரீனலின் , நார் அட்ரீனலின் ஆகும். 

இவை இரண்டையும் சேர்த்துப் பொதுவாக, அவசரக் கால ஹார்மோன் அல்லது சண்டை, பயமுறுத்தும், பறக்கும் ஹார்மோன் என்றும் அழைக்கப் படுகிறது. 

அழுத்தமான, அபாயகரமான நிலைமைகளை எதிர் கொள்ள நமது உடலை, இவை விரைவாகத் தயார் செடீநுகின்ற படியால் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

•• இந்த ஹார்மோன்கள் இதயத் துடிப்பினை அதிகரிக்க செய்கின்றன.

•• விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.

•• சுவாச வீதத்தை அதிகரிக்கின்றன.

•• கிளைகோஜனைக் குளுக்கோஸாக மாற்றுவதை ஊக்கு விக்கின்றன.

•• கண் பாவையை விரிவடையச் செய்கின்றன.

•• மிகையான வியர்த்தலை உண்டாக்கு கின்றன.

•• உரோமம் குத்திட்டு நிற்கச் செய்கிறது. சுருங்கக்கூறின், அட்ரினலினும், நார் அட்ரினலினும் அவசர காலங்களில் உடலைத் தயார் செய்து அத்தகைய கால கட்டங்களை எதிர் கொள்ள ஏதுவாக்குகின்றன அல்லது அதை விட்டு விலகிச் செல்லச் செய்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)