பொய்கை அணைக்கு வரும் இளம் ஜோடிகளை மிரட்டி, இளம் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்வது அதிகரித்து உள்ளதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டி உள்ளனர். 
பொய்கை அணையில் காம களியாட்டம்குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி அருகே உள்ளது பொய்கை அணை. இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ஆகும். அணை நிரம்பினால் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. 

மற்ற சமயங்களில் இங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. பொய்கை அணைக்கு செல்லும் வழிப்பாதை களும் காடுகள் நிறைந்த பகுதி ஆகும். இதனால் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. 

கஞ்சா விற்பனை

குறிப்பாக கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்த பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடம் உள்ளது. இங்கு தான், கஞ்சா விற்பனை கும்பல் முகாமிடு கிறது. 
கஞ்சா விற்பனை
கும்பலாக இருந்து கஞ்சா, மது அருந்துவ துடன், சில சமயங்களில் பெண்களை அழைத்து வந்தும் உல்லாசமாக இருந்து வருகிறார்கள்.
பொது மக்கள் நடமாட்டம் இல்லாதது, போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் இந்த கும்பல் சுதந்திரமாக உலா வருகிறார்கள். சமீப காலமாக இவர்களின் செய்கைகள் அத்துமீற தொடங்கி உள்ளன. 

பாலியல் உறவு

குறிப்பாக பொய்கை அணைக்கு வரக்கூடிய இளம் ஜோடிகளை மிரட்டி பணம், நகைகள் பறிப்பது, இளம் பெண்களை மிரட்டி வலுக்கட்டாய மாக பாலியல் உறவு கொள்வது போன்ற செய்கைகள் நடக்கின்றன. பொய்கை அணைக்கு அடிக்கடி காதல் ஜோடிகள் வருவது உண்டு. இவர்களில் கல்லூரி மாணவ, மாணவிகளும் வருவார்கள். பொய்கை அணைக்கு கீழ் பைக் அல்லது காரை நிறுத்தி விட்டு, அதன் பின்னரே பொய்கை அணையின் மேல் பகுதிக்கு செல்ல முடியும். 

பொதுப்பணித் துறை சார்பில் இங்கு காவலாளிகள் யாரும் நியமிக்கப்பட வில்லை. எனவே ஜோடிகள் செல்வதற்கு எந்த வித இடையூறும் கிடையாது. இவ்வாறு செல்லும் இளம் ஜோடிகள், அங்கு உல்லாசமாக இருந்து விட்டு வருவார்கள். 

இளம் ஜோடிகளை நோட்ட மிடுவார்கள்

பொய்கை அணைக்கு கீழ் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தில் இருந்து பார்த்தால் அணைக்கு யார், யார் செல்கிறார்கள் என்பது தெரியும்.
இளம் ஜோடிகளை நோட்டமிடுவார்கள்
இந்த கட்டிடத்தில் மறைந்து இருக்கும் கும்பல், இளம் ஜோடிகள் செல்வதை நோட்ட மிடுவார்கள். அவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதும், அந்த வாகனத்தின் டயர்களை பஞ்சர் ஆக்கி விடுவார்கள். 

பின்னர் திரும்பி வரும் போது வாகனம் பஞ்சர் ஆகி நிற்பதால், செய்வத றியாமல் அந்த ஜோடிகள் தவிப்பார்கள். அந்த சமயத்தில் இந்த கும்பல் சுற்றி வளைத்து தங்களுக்கு தேவையான வற்றை நிறைவேற்றி கொள்கிறார்கள். 

அந்த இளம் பெண் அழகாக இருந்தால், வலுக்கட்டாய மாக செக்ஸ் உறவு கொள்கி றார்கள். சமீபத்தில் மாணவி ஒருவர் இந்த கும்பலால், சீரழிக்கப் பட்டதாக கூறப்படு கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட ஜோடிகள் இதை வெளியில் சொல்வ தில்லை.
செக்ஸ் உறவுஏற்கனவே வீட்டுக்கு தெரியாமல் வந்து இருப்பதால், வெளியில் சொன்னால் மானம் போய் விடும் என பயந்து அப்படியே மறைத்து விடுகிறார்கள். இவ்வாறு இளம் ஜோடிகள் நடந்த சம்பவங் களை மறைப்பது, இந்த கும்பலுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. 

செல்போனில் படம் பிடித்து மிரட்டுவது

குறிப்பாக உள்ளூரை சேர்ந்த கஞ்சா கும்பல் தான் இது போன்ற செய்கைகளில் ஈடுபடுகி றார்கள். ஜோடிகள் வரும் போது, ரகசியமாக செல்போனில் படம் பிடித்து மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. 
செல்போனில் படம் பிடித்து மிரட்டுவது
எந்த வித கண்காணிப்பும் இல்லாத பகுதி என்பதால், இவர்களின் அத்து மீறல்கள், அட்டகாசம் வெளியே தெரிவ தில்லை. இது மட்டுமின்றி விபசார புரோக்கர்கள் சிலர், இளம் பெண்களை இங்கு அழைத்து வந்து வாலிபர்களு க்கு சப்ளை செய்யும் இடமாகவும் மாறி உள்ளது.

பொது மக்கள் கூறுகையில்
இது குறித்து சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், பொய்கை அணை அடிவார பகுதியில் போலீசார் எந்த வித கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவ தில்லை. 
பொது மக்கள் கூறுகையில்
இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மது அருந்துவது, கஞ்சா புகைப்பது என இருந்த நிலை மாறி, இப்போது இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் இடமாகவும் பொய்கை அணை மலை அடிவார பகுதி மாறி வருகிறது. 

வெளியே கூறினால், எங்கு தங்களுக்கு ஆபத்தாகி விடும் என்பதால் யாரும் வெளியே சொல்வ தில்லை. கொலை போன்ற விபரீதங்கள் நடப்பதற்கு முன் காவல்துறை இதை கட்டுப் படுத்தும் வகையில் இங்கு ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என்றனர்.

பொதுப்பணித்துறை அலட்சியம்

பொதுப்பணித் துறை சார்பில் உள்ள பாழடைந்த கட்டிடம் தான், பெரும்பாலான பிரச்சினை களுக்கு காரணமாக உள்ளது. இங்கு காவலாளி யும் கிடையாது. பொதுப்பணித் துறை சார்பில் முதலில் தற்காலிக பணியாளர்கள் காவலாளிக ளாக இருந்தனர். 
பொதுப்பணித்துறை அலட்சியம்ஆனால் போதிய சம்பளம் கொடுக்காத பிரச்சினை காரணமாக இங்கு யாரும் இப்போது இல்லை. எனவே உடனடியாக பொதுப்பணித் துறை இங்கு காவலாளியை நியமித்து கண்காணிக்க வேண்டும். 
காவலாளி நியமிக்கப்படும் பட்சத்தில் இளம் ஜோடிகள் தன்னந் தனியாக வருவது தவிர்க்கப்படும்.

போலீசார் பற்றாக்குறை

ஆரல் வாய்மொழி காவல் நிலைய பகுதியில் அடிக்கடி திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. 
போலீசார் பற்றாக்குறை
குறிப்பாக வன பகுதிகள் நிறைந்த பகுதி ஆகும். மிக முக்கியமான மகேந்திரகிரி ஐ.எஸ். ஆர்.ஓ. மையம், ஆரல் வாய்மொழி காவல் நிலைய பகுதி அருகே தான் அமைந்துள்ளது. 

எனவே இங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். ஆனால் போதிய போலீசார் இல்லாததால், ரோந்து பணிகள் சரிவர நடப்பது இல்லை. 

போலீசார் இல்லாத நிலை

காவல் நிலையங் களுக்கு வரக்கூடிய மனுக்களை விசாரிப்பதற்கு கூட போதிய போலீசார் இல்லாத நிலை உள்ளது. 
போலீசார் இல்லாத நிலை
எனவே இந்த காவல் நிலையத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் போதிய போலீசார் நியமித்து, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கடலில் பாலம் கட்டுவது