ஊட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மது பாட்டிலில் பல்லி கிடந்ததால், குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
மது பாட்டிலில் பல்லிநீலகிரி மாவட்டம், ஊட்டி கமர்சியல் சாலையில், காபிஅவுஸ் அருகே டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த டாஸ்மாக் கடையில் ஊட்டியை சேர்ந்த ஒருவர் குவாட்டர் மதுபாட்டில் வாங்கினார். 

வீட்டிற்கு சென்று மதுபாட்டிலை எடுத்து பார்த்தபோது பாட்டிலுக்குள் பல்லி ஒன்று செத்து மிதந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
இது குறித்து அவர், டாஸ்மாக் கடை சூபர்வைசரிடம் கூறினார். அவரது அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் ‘குடிமகன்’ புகார் அளித்தார்.

மது பாட்டிலில், பல்லி இறந்த நிலையில் கிடந்த சம்பவம், காபிஅவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.