ரிக் மூலம் தோண்டப்படும் குழி.. இன்னும் 5 மணி நேரம் - சுஜித்தை மீட்கும் பணி !

0
திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்பதற் காக தற்போது புதிய ரிக் மிஷின் கொண்டு வரப்பட்டு பணிகள் நடக்கிறது.
ரிக் மூலம் தோண்டப்படும் குழி


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டி, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் நேற்று முதல் நாள் மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

நேற்று முதல் நாள் மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. தற்போது வரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

நேற்று இரவு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஓஎன்ஜிசி, தீயணைப்பு படையினர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

எவ்வளவு தூரம்

சிறுவன் சுஜித் நேற்று முதல் நாள் மாலை 25 அடி ஆழத்தில் தான் சிக்கி இருந்தார். அப்போது அவரையே கயிறு கட்டி மேலே தூக்கும் பணிகள் தோல்வி அடைந்தது. 

அதன்பின் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில், சிறுவன் சுஜித் மேலும் கீழே ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். சுமார் 70 அடி ஆழத்துக்கு குழந்தை சென்று விட்டது.

பேசிக்கொண்டு இருந்தார்

25 அடி ஆழத்தில் இருந்த வரை சுஜித் நல்ல படியாக பேசிக்கொண்டு இருந்தார். சுஜித்தின் பெற்றோர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். 
மயக்கம்


ஆனால் 75 அடி ஆழத்திற்கு சென்ற பின் சுஜித் பேசவில்லை. சுஜித்திடம் இருந்து வரக்கூடிய அழுகுரல், சத்தம் என்று எதுவும் வெளியே கேட்க வில்லை.

மயக்கம்

சுஜித் குழியில் ஆழத்திற்கு சென்றதால் மயங்கி இருக்கலாம். உணவு மற்றும் பயம் காரணமாக சுஜித் மயங்கி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். 

சுஜித் வெளியே எடுக்கப்பட்ட உடன் அவருக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

ஓஎன்ஜிசி

தொடர்ந்து 47 மணி நேரமாக சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஓஎன்ஜிசி யிலிருந்து ரிக் மிஷின் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்தது. சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

ஆனால் 27 அடியில் நிறைய பாறைகள் இருந்ததால் பணிகள் பாதியில் நின்றது. அதன்பின் புதிய ரிக் மிஷின் கொண்டு வரப்படு வதற்காக நேரம் போனது.

எத்தனை முடிந்துள்ளது
ஓஎன்ஜிசி


இந்த நிலையில் தற்போது புதிய ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது.

புதிய ரிக் இயந்திரம் மூலம் 4 அல்லது 5 மணி நேரத்தில் குழி தோண்டும் பணிகள் முடிவடையும். 

சுரங்கம் தோண்டும் பணி காலை 7.10-க்கு தொடங்கிய. இது வரை சுமார் 35 அடிக்கு சுரங்கம் தோண்டப் பட்டுள்ளது

குழி எப்படி

ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2மீட்டர் தொலைவில் இந்த குழி தோண்டப் படுகிறது. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1மீட்டர் அகலத்தில் குழி தோண்டப் படுகிறது. 

குழியில் இறங்க 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 5 மணி நேரத்தில் குழி தோண்டப்பட்டு விடும் என்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings