ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுஜித்தை சுரங்கம் அமைத்து மீட்கும் பணியில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 17 அடி ஆழத்தில் நிறைய பாறைகள் இருப்பதால் சுரங்கம் அமைக்கும் பணி தாமதம் அடைந்துள்ளது.
சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் நேற்று முதல் நாள் மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
நேற்று முதல் நாள் மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. தற்போது சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகே இன்னொரு பெரிய குழி ஓஎன்ஜிசி மூலம் தோண்டப் படுகிறது.
குழி உண்டு
ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2மீட்டர் தொலைவில் இந்த குழி தோண்டப் படுகிறது. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1மீட்டர் அகலத்தில் குழி தோண்டப் படுகிறது.
குழியில் இறங்க 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 1 மணி நேரத்தில் குழி தோண்டப்பட்டு விடும் என்கிறார்கள்.
சுஜித் மீட்பு
இந்த நிலையில் சுஜித்தை மீட்கும் பணியில் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 100 அடிக்கு ஆழமாக இந்த குழி தோண்டப் படுகிறது.
போர்வெல்லு க்கு அருகே தோண்டப்படும் இந்த குழி மூலம் சுரங்கம் அமைத்து, போர்வெல் குழியில் சிக்கி இருக்கும் சுஜித் மீட்கப்பட உள்ளார்.
ஆனால் சிக்கல்
ஆனால் இந்த குழி தோண்டப்படும் பகுதியில் நிறைய பாறைகள் இருக்கிறது. இதனால் ரிக் மிஷன் கொண்டு குழி தோண்டுவது கடினமாக காரியமாக மாறியுள்ளது.
பொதுவாக ரிக் மிஷின் கொண்டு குழி தோண்ட 100 அடிக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்.
என்ன தொய்வு
ஆனால் இந்த பகுதியில் 17 அடிக்கு பிறகு நிறைய பாறைகள் இருக்கிறது. இந்த பாறைகளை எல்லாம் ரிக் மிஷின் உடைத்து உள்ளே செல்ல வேண்டும்.
ஆகவே குழி தோண்டும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குழி தோண்டும் பணிகள் மூன்று மணி நேரம் தாமதம் ஆகலாம் என்று கூறுகிறார்கள்.




Thanks for Your Comments