மணப்பாறையை அடுத்து நடுகாட்டுப் பட்டியில் சிறுவன் சுஜித்தை பாதுகாப்பாக விரைந்து மீட்க வேண்டும் என, நாகை மாவட்டம் தோப்புத் துறை பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
சிறுவன் சுஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லும் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத மாச்சரியங் களை கடந்து சிறுவன் சுஜித்துக் காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை என்ற ஒற்றை வார்த்தை மூலம் கரம் கோர்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.
உயிரைக் காப்பாற்ற
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப் பட்டியில், ஒரு உயிரை காப்பாற்றுவ தற்காக ஒட்டு மொத்த அரசு இயந்திரமும்
கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு ஆகச் சிறந்த அத்தனை முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிகின்றன.
கண்ணீர் மல்க
தொலைக் காட்சிகளில் மீட்பு பணிகளை பதை பதைப்புடன் பார்க்கும் தாய்மார்களும், முதியோர்களும் கண்ணீர் மல்க இறைவனை வேண்டி,
அந்தச் சிறுவன் சுஜித்தை எப்படியாவது மீட்டுவிட மாட்டார்களா என துடிதுடிக் கின்றனர்.
மனம் உருகி து ஆ
சிறுவன் சுஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என நாகை மாவட்டம் தோப்புத் துறையில் இன்று மாலை (அசர்) தொழுகைக்கு பிறகு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுஜித்துக் காக மனம் உருகி பிரார்த்தித்தனர்.
இறைவா காப்பாற்று
அந்த சிறப்பு பிரார்த்தனை யில் கலந்து கொண்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டினர்.
மேலும், உலக மக்களின் பிரார்த்தனையை ஏற்று சுஜித்தை காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு குழந்தைகள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.




Thanks for Your Comments