சுஜித்தை மீட்க இன்னும் ஏன் இந்த தாமதம்? முக்கிய காரணங்கள் !

0
சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள், 3 முக்கிய தவிர்க்க முடியாத காரணங் களால் கால தாமதம் அடைந்து வருகிறது.
சுஜித்தை மீட்க தாமதம்


நேற்று முதல் நாள் மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்று க்குள் விழுந்து விட்டார்.

இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு ரிக் இயந்திரம் கொண்டு ஆழமாக சுரங்கம் தோண்டி, சுஜித்தை மீட்க ஓஎன்ஜிசி முயன்று வருகிறது.

சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.

பணிகள்

இந்த நிலையில் தற்போது மீட்பு பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரம் கொண்டு குழி தோண்டும் பகுதியில் நிறைய பாறைகள் இருக்கிறது. இந்த பாறைகள் காரணமாக ரிக் இயந்திரம் எளிதாக குழியை தோண்ட முடிய வில்லை.

அதிக பாறைகள்

இதனால் ரிக் மிஷின் கொஞ்சம் கொஞ்சமாக திணறித் திணறி குழியை தோண்டி வருகிறது. 
அதிக பாறைகள்


இந்த பாறைகள் இல்லாமல் இருந்திருந்தால் 1 மணி நேரத்தில் குழி தோண்டி இருக்க முடியும்.

இதனால் தற்போது கூடுதலாக 4 மணி நேரம் தாமதம் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இயந்திரம்

அதேபோல் ஒரே ரிக் இயந்திரம் நீண்ட நேரம் செயலாற்ற முடியாது. அதனால் இன்னொரு ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதை கொண்டு வர 2 மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. இதனால் சுஜித்தை மீட்பதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

சுஜித் இருக்கும் பகுதி

அதேபோல் இங்கு தொடர்ந்து குழி தோண்டப் படுவதால் அருகில் சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் அழுத்தம் ஏற்பட்டு, அதிர்வுகள் மூலம் சுஜித் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. 

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை யாக சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதுவும் கால தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings