லுங்கி மற்றும் பணியன் அணிவதற்கு அரசு தடை விதித்துள்ளது. மீறினால், தண்டனை யாக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டம்
இது குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். பொதுவாக இந்தியர்கள் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக 

கயலி எனப்படும் லுங்கி மற்றும் பணியனில் உலா வருவதை வாடிக்கை யாக கொண்டிருக் கின்றனர்.

ஏன், நம்மில் பலர்கூட வீட்டில் இருக்கும் போது வெறும் லுங்கியுடன் இருப்பதையே விரும்புகின்றோம். 

அதே போல், நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் போது அரை டிரவுசர் போட்டுக் கொண்டு உல்லாசமாக செல்லுகின்றோம்.
சொகுசாக இருக்கையில் அமர்ந்தவாறு பயணிக்கும் நாமே இவ்வாறு செல்லும் போது, அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் எப்படி இருப்பார்கள் என பார்த்திருக்கின் றீர்களா...?

அதிலும், நீண்டதூரம் செல்லும் வாகன ஓட்டுநர்கள், தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, அதிகளவு உடல் உஷ்னத்தை எதிர் கொள்கின்றனர்.

இதனால், பெரும்பாலும் உள் பணியனில் வாகனத்தை இயக்கு வதையே விரும்பு கின்றனர்.
லுங்கி, பணியன்
அதே போன்று, லாரி ஓட்டுநர் களைப் பார்த்தோ மேயானால், அவர்கள் எப்போதும் கயலி 

மற்றும் உள் பணியனில் மட்டுமே இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் இரவு, பகல் பாராமல் வாகனத்தை இயக்கு கின்றனர்.
மேலும், மற்ற வாகன ஓட்டிகளைக் காட்டிலும் பெரும் இவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இதன் காரணமாகவே, அவர்கள் எப்போதும் லுங்கி மற்றும் பணியனில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

ஆனால், இனி இவர்களால் இப்படி காற்றோட்டமான உடை யணிந்து செல்ல முடியாது. ஆம், உத்தர  பிரதேச மாநில அரசு, வாகன ஓட்டிகள் இனி கட்டாயம் சீருடை அணிந்தே இருக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது.

இந்தியாவை வாகன விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் விதமாக மத்திய அரசு அண்மையில் புதிய திருத்தப் பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.?

இத்திட்டம், கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது நடைமுறை க்கு வந்த நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஓர் அச்சம் கலந்த சூழ்நிலையை நிலவுகின்றது.
ஏனெனில், இதுவரை இந்தியர்கள் காணாத அளவிலான உச்ச பட்ச அபராதத்தை புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் விதிக்கின்றது.

அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது.
வாகன ஓட்டுநர்கள்
டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞர் விதிமீறலில் ஈடுபட்டதன் காரணமாக அவருக்கு ரூ.24 ஆயிரத்திற் கான அபராத தொகை வழங்கப் பட்டது.

இவரின் ஸ்கூட்டரோ வெறும் ரூ.16 ஆயிரம் மதிப்புடையது என கூறப்படு கின்றது. இதன் காரணமாகவே, இச்சம்பவம் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநில போக்குவரத்துத் துறை, லாரி மற்றும் டிரக் டிரைவர்கள் சீருடை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என கட்டாய உத்தரவை பிறப்பித் துள்ளது.

மேலும், இதனை மீறும்பட்சத்தில் ரூ. 2,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அது எச்சரித் துள்ளது. இது, டிரக்கின் உதவியாள ருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆகையால், வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்து செல்லும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஓட்டுநர்கள் பணியின் போது சீருடையில் இருக்க வேண்டும் என்பதை னை மோட்டார் வாகன சட்டம் 1939 மற்றும் 1989ன் படி கட்டாய மக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்தது.
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரி செய்ய?
இதனை உறுதிப் படுத்தும் வகையிலேயே உத்தரபிரேதச அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேசமயம், முன்னதாக இந்த விதி மீறலுக்கு ரூ. 500 மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், அது தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ன் படி, ரூ. 2,000ஆக மாற்றப் பட்டுள்ளது.
லாரி மற்றும் டிரக் டிரைவர்கள்
இந்த புதிய பள்ள வாகன ஓட்டுநர் களுக்கும் பொருந்தும் அம்மாநில போக்குவரத்துத் துறை ஏஎஸ்பி பூர்னெந்து சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "சட்டப்படி டிரக், டிராக்டர், கன மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களை சீருடை இல்லாமல் இயக்குவது தண்டனைக் குரியதாகும்.
பைபாஸ் சர்ஜரி என்பது?
இவர்கள் கட்டாயம் முழுக்கால் பேண்ட், சீரான சட்டை மற்றும் ஷூ உள்ளிட்ட வற்றை அணிந்திருக்க வேண்டும். இந்த சட்டம் உதவியாளர்கள் மற்றும் நடத்துநர் களுக்கும் பொருந்தும்" என்றார்.

தொடர்ந்து, இது அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் களுக்கும் பொருந்தும் என தெரிவித்தார். 

அத்துடன், அவர்கள் விதிமீறலில் ஈடுபடும் பட்சத்தில் அபராதத்தில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார்கள் என உறுதியாக கூறினார்.