பரிட்சையில் காப்பி அடிக்காமல் இருக்க ஆசிரியர் செய்த வேலை !

0
பரிட்சை அறையில் மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க அந்த அறையே பலத்த பாதுகாப்பான முறையில் நீண்ட இடைவேளை யில் பெஞ்சுகள் போடப் பட்டிருக்கும்.
பரிட்சையில் காப்பி அடிக்காமல் இருக்க
ஆசிரியரும் மாணவர்களே யாரும் என்னை ஏமாற்ற முடியாது என வாய் வார்த்தை யாக கண்டிப்பார்கள். அதையும் மீறி சில தகவல் பரிமாற்றங்கள் அந்த அறையில் நடப்பது வேறு விஷயம். 
இவற்றை யெல்லாம் விஞ்சும் வகையில் மெக்சிகோவைச் சேர்ந்த இந்த ஆசிரியர் செய்த காரியத்தைப் பாருங்கள்.

மெக்சிகோவின் ட்லக்ஸ்கலா (Tlaxcala) என்ற மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் பரிட்சை எழுதியுள்ளனர். பரிட்சை எழுதும் அறை சிறிய அளவில் இருப்பதால் மாணவர்கள் எளிதில் காப்பி அடிக்கக் கூடும். 
இதைக் கருத்தில் கொண்டு அட்டைப் பெட்டிகளை மாணவர்களின் தலையில் மாட்டி விட்டு அக்கம் பக்கம் மற்ற மாணவர்களை பார்க்காத வாறு செய்துள்ளார். 
இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படி நடுவே ஓட்டை வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியதை யடுத்து மாணவர்களின் பெற்றோர் அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings