சுங்க சாவடியில் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவது எப்படி?

0
நீங்கள் சுங்க சாவடிகளை கடக்கும் போது பல முறை பாஸ்ட் டேக் என்ற ஒரு தனியாக ஒரு லைன் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதன் விழியாக செல்லும் வாகனம் நிற்க்காமல் நேராக செல்லும். 
பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவதுஅந்த வாகனங்கள் நிற்காமல் செல்வதால் அவர்களுக்கு சுங்கசாவடி கட்டணம் கிடையாது என்று எண்ணி விடாதீர்கள் அவர்கள் பாஸ்ட் டேக் என்ற கார்டை பயன்படுத்தி சுங்க சாவடி கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

பாஸ்டேக் கார்டு என்பது ஒரு ஐ.டி கார்டு போன்றது. இதை வாங்கி நாம் காரின் கண்ணாடியில் பொருத்தி கொள்ள வேண்டும். 
மேலும் இந்த கார்டிற்கு நாம் தேவையான அளவிற்கு காசை முன்னரே செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறாக நாம் கார்டை ரீசார்ஜ் செய்யப்பட்ட கார்டை காரின் கண்ணாடி யில் பொருத்தினால் காரின் சுங்க சாவடியில் நுழையும் இடத்தில் ஒரு மிஷின் பொருத்தப் பட்டிருக்கும். 

அந்த மிஷின் நம் காரின் எண்ணை கண் இமைக்கும் நொடியில் கண்டறிந்து நமது வருகையை பதிவு செய்யும். பதிவு செய்யப் பட்டவுடன் நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த காசில் இருந்து அந்த சுங்க சாவடிக்கான பணம் கழிக்கப்பட்டு விடும். 

மேலும் அந்த பகுதியை அடைத்திருக்கும் கம்பியும் தானாக திறந்து விடும். இதன் மூலம் சுங்கசாவடியில் பணம் செலுத்து வதற்காக வாகனங்களை வரிசைகட்டி நிறுத்துவதை தவிர்க்கலாம். 

பாஸ்ட் டேக் கார்டை பெறுவது எப்படி? 

இந்த பாஸ்ட் டேக் கார்டுகள் எல்லா டோல்கேட் களிலும் கிடைக்கும். அது மட்டு மல்லாமல் பாஸ்ட் டேக் கார்டுகள் சில ஏஜென்ஸி மூலமாகவும் விற்பனை செய்யப் படுகிறது. 
அவர்கள் மூலமும் கார்டை வாங்கி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். மேலும் ஆன் லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். 

ஆக்டிவேட் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் 
பாஸ்ட் டேக் கார்டை ஆக்டிவேட் செய்ய1. நீங்கள் அந்த காரை பயன்படுத்த போகும் காரின் ஆர். சி புக். 

2. காரின் உரிமை யாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 

3.வாகன உரிமை யாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பபடவேண்டும். 

4. இருப்பிட சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல் 

பாஸ்ட் டேக் கார்டு பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் 

நெடுஞ் சாலைகளில் பயணம் செய்யம் போது பாஸ்டேக் கார்டு பெறுவதன் மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும்.
1. கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை, சுலபமாக பணத்ததை செலுத்தும் வசதி

2. சுங்கசாவடிகளில் பணம் செலுத்த வாகனத்தை வரிசையில் நிறுத்த தேவையில்லை.ஏன் வாகனத்தை நிறுத்தவே தேவையில்லை. நாம் அந்த இடத்தை கடந்து சென்று கொண்டே இருக்கலாம்.

3. பாஸ்ட் டேக் கார்டை ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு பயன்படுத்தலாம்.

4. சுங்க சாவடிகளை கடந்த பின்பு கழிப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

5. பாஸ்ட் டேக் வாடிக்கை யாளர்களுக்கு சுங்கசாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி தரப்படுகிறது.

ரீசார்ஜ் செய்வது எப்படி?

பாஸ்ட் டேக் வாடிக்கை யாகளர்கள் ஒரு முறைக்கு ரூ 100 - ரூ 1 லட்சம் வரை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, NEFT, RTGS, நெட் பேங்கிங் ஆகிய வசதிகள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். அல்லது சுங்க சாவடிகளிலும் நேரடியாக சென்று ரீசார்ஜ் செய்யலாம்.

பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவது எப்படி?
பாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்வதுஇந்த கார்டை நீங்கள் காரின் முகப்பு கண்ணாடியில் பொருத்தி கொண்ட பின் நீங்கள் சுங்க சாவடியில் பாஸ்ட் டேக் வாடிக்கை யாளர்களுக்காக உள்ள தனி பாதையில் நீங்கள் செல்லும் போது

உங்கள் காரின் பாஸ்ட் டேக் கார்டு மூலம் உங்கள் வருகை உடனடியாக பதிவு செய்யப்பட்டு நீங்கள் ரீச்சார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து கழித்து கொள்ளப்படும். 
பேலன்ஸ் செக் செய்வது பாஸ்ட் டேக் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஐ.டி. பாஸ்வேர்டை பயன்படுத்தி வெப்சைட் மூலம் அவர்களது பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் இந்த கார்டை பிளாக் செய்ய கார்டில் வழங்கப் பட்டுள்ள கஸ்டமர் கேர் எண்ணில் தொடர்பு கொண்டு கார்டை பிளாக் செய்யவும் முடியும்.

மேலும் கார்டு தொலைந்து விட்டால் அந்த கார்டை பிளாக் செய்து புதிய கார்டை வாங்கி கொள்ளலாம். பழைய கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய கார்டிற்கு மாற்றப்படும். 

தற்போது பாஸ்ட் டேக் கார்டுகள் இந்தியா முழுவதும் உள்ள 240 சுங்க சாவடிகளில் பயன்படுத்த முடியும். மேலும் அதிக சுங்க சாவடிகளில் பாஸ்ட் டேக் பயன்பாட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
தற்போது சுங்க சாவடிகளில் பாஸ்ட் டேக் கார்டு கட்டாயம் இல்லை என்றாலும், வரும் காலத்தில் கட்டாய மாக்கப்படலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. 

அதனால் தற்போது இருந்தே பாஸ்ட் டேக் கார்டை பயன் படுத்துவதை துவங்குவது நல்லது.
வீடியோஸ்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !