கொலையாளிக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர் - அதிரடி சஸ்பெண்ட் !

0
இரட்டை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க சொன்னால், அந்த கொலை யாளிகளுக்கே ஆதரவாக இருந்திருக் கிறார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன். இதை யடுத்து பாஸ்கர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
கொலையாளிக்கு சாதகமாக இன்ஸ்பெக்டர்



கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப் பட்டியை சேர்ந்தவர் வீரமலை. இவருக்கு வயசு 70. சமூக ஆர்வலர் இவர். இவரது 45 வயது மகன் நல்லதம்பி.
கடந்த 29-ம் தேதி அவரது தோட்டத்தில் வேலையாக இருந்த போது, திடீரென ஒரு கும்பல் அரிவாளுடன் நுழைந்து வீரமலையை சரமாரி வெட்டிக் கொன்றது.

தப்பியது

அங்கிருந்து தப்பிய அந்த கும்பல், அங்குள்ள ஒரு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த நல்ல தம்பியையும் வழி மறித்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. கொஞ்ச நேரத்திலேயே அப்பா - மகன் இருவருமே உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சரண்

குளித்தலை போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கொலை யாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். இதை யடுத்து 6 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். 

எனினும், கொலை சம்பவம் தொடர்பாக, இறந்தவர் களின் உறவினர் களிடம் டிஐஜி பால கிருஷ்ணன் நேற்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தான், இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முறையாக விசாரிக்க வில்லை என்று தெரிய வந்தது.

பாஸ்கரன்

ஏனெனில், ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக உயிரிழந்த வீரமலை ஒரு வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

இதனால் அவருக்கு எதிரிகள் அதிகமாகி விட்டதால், உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் தான் புகார் அளித்திருக்கிறார். ஆனால் பாஸ்கரன் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.

சஸ்பெண்ட்
டிஐஜி பால கிருஷ்ணன்



அதேபோல, நேற்று இந்த கொலை தொடர்பாக 2 பேர் சரணடைய வந்துள்ளனர். இதில், ஒருவர் தான் சரண் ஆனால், இன்னொருவர் தப்பி விட்டார். 
அவர் தப்பித்து ஓடவும் பாஸ்கர் தான் காரணம் என்றும் தெரிய வந்தது. இதை யெல்லாம் ஆராய்ந்த பிறகு, பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்ப ட்டுள்ளார்.

உத்தரவு

ஐஜி வரதராஜன் பரிந்துரையின் பேரில் டிஐஜி பால கிருஷ்ணன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

அது மட்டுமில்லை, உயரதிகாரி களின் உத்தரவு இல்லாமல் குளித்தலை பகுதியை விட்டு பாஸ்கரன் வெளியில் எங்குமே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings