ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை !

0
புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுய பயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சி யாளரின் வழி காட்டுதலோடு உடற்பயிற்சி யினை மேற்கொள்ள வேண்டும்.
ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை


ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காத வர்கள் டிரெட்மில், சைக்கிளிங் போன்ற பயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். 

மாடி படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவை களும் நல்ல உடற் பயிற்சிகளே. அதே போல் ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை.

நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சிக் கருவிகள், தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கும் படி பார்த்து சேர்ந்து பயிற்சி பெற வேண்டும்.


அதிகாலை யில் பயிற்சி பெறுவதே சிறந்தது. செய்துவிட்டு, நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணி நேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

நமது உடல் ஆரோக்கிய மாக இருக்க உடற் பயிற்சியும், சரியான உணவு பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற் பயிற்சிக்கு அளிப்பதில்லை.

இதை மாற்றி உடற் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)