ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 25 வயது நபரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்த போது, எவ்வளவு பெரிய மோசடி மன்னனை கைது செய்திருக்கிறோம் என்பது அவர்களுக்குக் கூட தெரிந்திருக்காது.
300 பெண்களை ஏமாற்றியவரை சிக்க வைத்த ஒரே புகார்
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத் தளங்களில் பணக்காரப் பெண்களாகத் தேடி அவர்களை ஏமாற்றி 

பணம் பறிப்பதையே தொழிலாக வைத்திருந்தவர் தான் குற்றவாளி பாடி வினோத்குமார் என்கிற சந்தீப் என்கிற பிரவீன். 
விசாகப்பட்டினத்தின் சத்யா நகரில் வசித்து வந்தார் இந்த மோசடி மன்னர். இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினரு க்கு இவரது மோசடிகள் தெரிய வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் புகைப்படங்கள் ஆபாச இணைய தளங்களில் இருப்பதாகவும், 

தான் ஒரு மென்பொறியாளர் என்பதால், அதனை அழிப்பதாகவும், அதற்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்றும் குற்றவாளி கூறி யிருக்கிறான். 

இந்த வேலைக்காக மாதம் ரூ.10 ஆயிரம் என கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரூ.40 ஆயிரம் வரை அப்பெண் அளித்துள்ளார். 

ஆனால், தன்னிடம் பணம் பெறும் நபர் பற்றி சந்தேகம் ஏற்பட்டதால், பணம் கொடுக்க மறுத்துள்ளார். 
இதை யடுத்து, பல்வேறு டேட்டிங் செயலிகளில் அப்பெண்ணின் புகைப் படங்கள் தொலைபேசி எண்ணுடன் ஏராளமானவை பகிரப்பட்டதால் கடும் அதிர்ச்சிக் குள்ளானார். 

டேட்டிங் இணைய தளத்தில் செல்போன் எண் பகிரப்பட்ட தால் ஏராளமான தொலைபேசி அழைப்புகளும் வந்ததால் கடுமையாக அதிர்ந்து போனார். 
இதை யடுத்து குற்றவாளி சந்தீப்பை தொடர்பு கொண்ட அப்பெண், இதுகுறித்து முறையிட்டுள்ளார். 

உடனடியாக அவற்றை யெல்லாம் அழித்து விடுவதாகவும், அதற்காக பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இதையடுத்து காவல் நிலையத்தில் அப்பெண் புகாரளிக்க, உடனடியாக வழக்குப் பதிவு செய்த சைபர் பிரிவு காவல்துறை, சந்தீப்பை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் சமூக தளங்களில் பெண்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று, அவர்களது புகைப் படங்களை ஆபாச இணையதளம், 

செயலிகளில் தானே பதிவேற்றி விட்டு, அப்பெண்ணை தொடர்பு கொண்டு புகைப்படங்களை நீக்க பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். 
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இது போல சுமார் 300 பெண்களை அவர் ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்துள்ளது. 
இது போன்ற மோசடியாளர்களை நம்ப வேண்டாம் என்றும், சொந்த விஷயங்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும், 

முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம் என்றும் பெண்களை காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.