உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாகி விடும். செய்யப்போகும் உடற்பயிற்சிக்கு ஏற்ப உடல் பாகங்களின் இயக்கம் அமைய வேண்டும். 
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் பின் விளைவுகள் !
முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கால் பாதங்களையும், கை விரல்களையும் தரையில் ஊன்றி குனிந்த நிலையிலும், 

படுத்த நிலையிலும் நிமிர்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதை தவறாக செய்தால் முதுகுவலி தோன்றி விடும்.
40 வயதை கடந்தவர் களுக்கு முதுகுவலி யுடன் மூட்டுவலி பிரச்சினையும் தலைதூக்கும். கால் தசை பகுதிகள் வலுப்படுவதற்கு குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

அப்போது மூட்டுகளை எல் வடிவத்தில் வைத்திருக்க வேண்டும். கழுத்து பகுதியையும் நேராக வைத்திருக்க வேண்டும். ஆண்கள் ‘தம்புள்ஸ்’ கொண்டு பயிற்சி செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். 

நேராக நிமிர்ந்து நின்று கொண்டு ‘தம்புள்ஸை’ நெஞ்சு பகுதியில் வைத்து கொண்டு கைகளை மேலும் கீழும் அசைக்க வேண்டும்.

அதை விடுத்து உடலை சாய்வாக வைத்து கொண்டு நெஞ்சு பகுதிக்கு மேலே தம்புள்ஸை தூக்கி கொண்டு பயிற்சி மேற்கொள்ள கூடாது.
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் பின் விளைவுகள் !
படுத்த நிலையில் இரு கைகளாலும் தம்புள்ஸை மேல் நோக்கி தூக்கும் போது கைகள் நேராக இருக்க வேண்டும். அதை விடுத்து கைகளை சாய்வாக வைத்து கொண்டு தம்புள்ஸை தூக்க கூடாது. 
அது கைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். பக்க விளைவு களையும் உண்டாகும். 

உடற் பயிற்சிகளை முறையாக கற்று கொண்டு, மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி நிபுணர்கள் அதற்கு வழி காட்டுவார்கள்.