சிறிய அளவில் உள்ள பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து (Lithotripsy) வெளியேற்றலாம். 
பித்தப்பைக் கல் சிகிச்சை

என்ற போதிலும் 'பித்தப்பை நீக்கம்' (Cholecystectomy ) எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுப்பதற்குச் சிறந்த வழி. 

பித்தப் பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை களில் 'லேப்ராஸ் கோப்பி' அறுவை சிகிச்சை முக்கியமானது.

இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட அடுத்த நாளில் வீட்டுக்குத் திரும்பி விடலாம். அடுத்த ஒரு வாரத்தில் இயல்பான வேலைகளைச் செய்து கொள்ள முடியும். 

இப்போது இதற்கு எண்டாஸ் கோப்பி மூலம் சிகிச்சை செய்யும் நவீன முறை அறிமுகமாகி யுள்ளது. ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ் கோப்பி’ (SpyGlass cholangioscopy) என்று அதற்குப் பெயர்.
உடலுறவு மேம்படுத்த ஊட்டச் சத்துகள் !

இந்த முறையில் பித்தப்பையை நீக்காமல், பித்தப்பைக் கற்களை மட்டுமே அகற்று கிறார்கள். இது அடைப்புக் காமாலை உள்ளவர் களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. 

வாய் வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பி உணவுக் குழாய், இரைப்பை, முன் சிறுகுடல்…. ஆகிய வற்றை எல்லாம் கடந்து,

பித்தக் குழாய் வழியாகக் கற்கள் உள்ள பித்தப் பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களை (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, அவற்றின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்து விடுகிறார்கள். 

இதனால் பித்தநீர்ப் பாதை சரி செய்யப் படுகிறது. மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகி விடுகிறது.

பித்தப்பை அழுகிய நிலையில் சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் போன்ற உறுப்புக ளோடு அது ஒட்டிக் கொள்ளும் நிலைமையில் நோயாளி சிகிச்சைக்கு வந்தார் என்றால், 

அப்போது பித்தப்பைக் கற்களையும் பித்தப் பையையும் நீக்குவதற்கு வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வது தான் நல்லது.