பிரச்சாரம் செய்யப் போகும் விஜயகாந்த் !

0
பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் எனவும் கூட்டதில் விஜயகாந்த் பேச மாட்டார் எனவும் சுதீஷ் தெரிவி த்துள்ளார்.
பிரச்சாரம் செய்யப்போகும் விஜயகாந்த்


அதிமுக தேமுதிக கூட்டணிப் பேச்சு வார்த்தையின் போது பாமகவுக்கு ஒதுக்கியதைப் போல தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென தேமுதிக முரண்டு பிடித்தது. 

இதனால் அதிமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தை நீண்ட நாட்களாக இழு பறியில் இருந்தது. சமீபத்தில் 4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது.

இந்நிலையில் தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பேசுகையில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலை யொட்டி கேப்டன் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்வார். 

ஆனால் கூட்டத்தில் அவர் பேசமாட்டார். உடல்நலம் தேறிவரும் அவர் நலம் பெற்று பழையபடி மக்களிடையே பேசுவார் என சுதீஷ் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings