ஸ்மார்ட்போனால் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை - எச்சரிக்கை.!

0
தாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தை ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் அதிகம் பயன்படுத்தியதனால் தனது கண் பார்வையை இழந்துள்ளது. 
குழந்தையின் பார்வை பறி போயுள்ளது
குழந்தையின் பார்வை பறிபோனதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்பாடு தான் என்று மருத்துவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
குழந்தையின் பார்வை பறி போயுள்ளது

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டிற்கு அடிமையாகிப் போன 4 வயதுக் குழந்தையின் பார்வை பறி போயுள்ளது. உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்

பிஞ்சு குழந்தைகளின் கவனத்தைத் திருப்பும் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களின் பின்னால் உள்ள 

விபரீதம் பற்றிப் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

அஜாக்கிரதை

பல பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பு வதற்கும், குழந்தைகளின் சேட்டைகளைக் குறைப்பதற்காகவும் 

அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஒன்றை பெற்றோர்கள் கொடுத்து விடுகின்றனர்.

ஆபத்தை உணராத பெற்றோர்
ஆபத்தை உணராத பெற்றோர்
முக்கியமாய் பெற்றோர்கள் வேலை செய்யும் நேரங்களில் குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் இருக்கப் பல பெற்றோர்கள், இந்த செயலின் ஆபத்தை உணராமல் செய்து வருகின்றனர்.

உடலின் ஆரோக்கியம்

ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற மொபைல் சாதனங் களைக் குழந்தைகள் நேரடியாக அணுகுவதனால் அவர்களுக்கு 

உளவியல் ரீதியான ஆபத்துடன் சேர்த்து உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப் படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபரீதத்தில் முடிந்த கதை

தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் என்பவற்றின் 4 வயதுக் குழந்தைக்குத் தான், ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் அதிகம் பயன்படுத்தியதனால் கண் பார்வை பறி போயுள்ளது. 

தனது குழந்தைக்கு 2 வயதில் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட்களை பயன்படுத்த அனுமதித்தது இன்று விபரீதத்தில் போய் முடிந்துள்ள தென்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கருவிழியில் சேதாரம்

இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அதிகப் படியான நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் பயன்படுத்திய தனால் குழந்தையின் கண் பார்வை மோசம் அடைந்துள்ளது என்றும். 

குழந்தையின் கருவிழியில் அதிகப் படியான சேதாரம் ஏறப்பட்டுள்ள தென்றும் மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

கருவிழியில் சிகிச்சை
கருவிழியில் சிகிச்சை
குழந்தையின் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்கு மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் பார்வை கோளாறை சரி செய்துள்ளனர்.

டைஸ்க்கினியாஸ்

ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாதனங்களில் ஏற்படும் டைஸ்க்கினியாஸ் தான் முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். 

டைஸ்க்கினியாஸ் என்பது மயோபியா, ஃபோர் சைடுட்னிஸ், அசிஸ்டிமடிசம், சிதைந்து போகும் பிரதிபலிப்பு, சிதைந்த சிதைவு போன்ற பல விதமான காரணங்களால் உருவாகுவதாகும்.
பெற்றோருக்கு அறிவுரை

இரண்டு கண்களிலும் மேற்கொள்ளப் பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தை யின் பார்வை 80 சதவீதம் குணப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அதே போல் இனி ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி, டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன் படுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கப் பட்டுள்ளது.

குழந்தைக்கு நேர்ந்த சோகம்
ஸ்மார்ட்போனால் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை
தான் குழந்தைக்கு நேர்ந்த சோகம் போல் மற்ற குழந்தைக்கு நேரிட வேண்டாம் என்று குழந்தையின் தகப்பரான தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகளின் ஆரோக்கி யத்திற்கும் மனதிற்கும் ஆபத்து விளைவிக்கும் மொபைல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உலக பெற்றோர் அனைவரையும் எச்சரித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)