இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

0

சென்னையைச் சேர்ந்த பதினெட்டே வயதான கல்லூரி மாணவி மகிமா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது. 

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மகிமா, திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். 

மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் மகிமாவை உடனடியாக, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.  

வயதானோர் மற்றும் ஆண்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும்' என்கிற பொதுவான நம்பிக்கையை இது போன்ற நிகழ்வுகள் சமீப காலமாகத் தகர்த்து வருகின்றன. 

இளம் வயதிலேயே இதயம் தொடர்பான நோய்கள் தாக்கி பலர் இறந்து போகிறார்கள். 

அவர்களில் பெண்களும் அடக்கம். உலக அளவில் ஏற்படும் இயற்கை மரணங்களில் 12 முதல் 15 சதவிகிதம் பேர் இந்த திடீர் மாரடைப்பால் இறந்து போகிறார்கள். 

அவர்களில் லட்சத்தில் ஒருவர் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதய வால்வுகளில் பிரச்னை, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திடீர் மாரடைப்பு உண்டாகிறது. 

இது தவிர, அதிகமாக உடற்பயிற்சி (வார்ம் அப் எடுத்துக் கொள்ளாமல்) செய்பவர்களுக்கும், 

திடீரென கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் வைத்தியர்கள்.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

இதய சம்பந்தமான பாதிப்புகளால் உயிரிழக்கும் இளம் வயதினர் மாரடைப்பால் மட்டும் உயிரிழப்பதில்லை. 

பல்வேறு வகையான இதயப் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அவற்றில் ஒன்று, இதயத் தசை பாதிப்பான கார்டியோ மயோபதி (Cardiomyopathy).

பிறக்கும் போதே இதயத் தசைகள் சற்று தடிமனாக இருந்தால் இந்தப் பாதிப்பு உண்டாகும். 

தசைகள் கடினமாக இருப்பதால் இதயத்திலிருந்து வெளியே இரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படும் (Hypertrophic cardiomyopathy). 

அதன் காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்தம் சரியாகச் செல்லாமல் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அடுத்ததாக, வலது வென்டிரிக்கிள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருப்பதால் உண்டாகும் 

பாதிப்பான, ரைட் வென்ட்ரிக்குலர் டிஸ்பிளேசியா (Right Ventricular Dysplasia) காரணமாகவும் இளம் வயதினர் பலர் இறந்து போகிறார்கள். 

அரித்மியாஸ் என்று சொல்லப்படும் இதயப் படபடப்பு காரணமாகவும் இறப்பு ஏற்படுகிறது. 

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

அதிலும் குறிப்பாக, புருகடா சிண்ட்ரோம் (Brugada syndrome) என்று சொல்லப்படும் சீரற்ற இதயத் துடிப்பால் தான் பலர் பாதிக்கப் படுகிறார்கள்.

மேற்கண்ட இந்தப் பாதிப்புகள் அனைத்தும் வெளியே தெரியாது. 

வீட்டில் யாருக்காவது இதயப் பாதிப்பு இருந்தாலோ, மாரடைப்பால் சிறுவயதிலேயே இறந்து போயிருந்தாலோ வீட்டிலுள்ள அனைவருமே ஒரு முறை இ.சி.ஜி சோதனை செய்து கொள்வது நல்லது. 

தவிர, விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் தங்களது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது.

எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் படிப்படியாகத் தான் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். 

எடுத்ததுமே பல கிலோ மீட்டர் தூரம் ஓடுவது, பாரமான பொருட்களைத் தூக்கி பயிற்சி செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

கல்லூரிகளில் பொழுது போக்குக்காக விளையாடும் மாணவர்களுக்குப் படபடப்பு, மூச்சுத் திணறல், மயக்கம், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. 

அதே போல, பெற்றோர் அல்லது தங்களது பரம்பரையில் யாருக்காவது சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருந்தால் 

அவர்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் வைத்தியர்கள்.

அரித்மியாஸ் என்று சொல்லப்படும் இதயப் படபடப்பு காரணமாகப் பலருக்கு மூளைக்குச் செல்ல வேண்டிய இரத்தம் 

சரியாகச் செல்லாமல் நினைவிழப்பு ஏற்பட்டு, அதிலிருந்து உடனடியாக மீள இயலாமல் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

வெளிநாடுகளில் கல்லூரி, பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் `ஏ.ஈ.டி (Automated External Defibrillators) எனப்படும் 

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?
முதலுதவி கருவி இருக்கும். நின்று போன இதயத் துடிப்பை மீட்டுருவாக்கம் செய்ய இது உதவும்.

தொடர்ச்சியாகப் பயிற்சிகளில் ஈடுபடும் போதும், விளையாடும் போதும் சிலருக்கு இரத்தத்தில் உள்ள பொற்றாசியம் குறைந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

அதைத் தவிர்க்க பயிற்சி மற்றும் விளையாடும் நேரங்களில் வாழைப்பழம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் வைத்தியர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)