அபினந்தன் விடுவிப்பதற்கு முன் பாக். அரசு வெளியிட்ட வீடியோ !

0
பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை போர் விமானி அபினந்தன் வர்தமன், நேற்று இரவு வாகா எல்லையில் பாகிஸ்தா னால் ஒப்படைக்கப் பட்டார். அவர் ஒப்படைக்கப் படுவதற்கு முன்னர் பாகிஸ்தான் அரசு தரப்பு, ஒரு வீடியோவை வெளி யிட்டுள்ளது. 
பாக். அரசு வெளியிட்ட வீடியோ


அந்த வீடியோவில் விங் கமாண்டர் அபினந்தன் பேசியுள்ளார். நேற்று மாலையே அபினந்தன், இந்தியா விடம் ஒப்படைக்கப் படுவார் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால், சில ஆவண சரி பார்ப்புகள் காரணமாக அவரை ஒப்படைப்பது தள்ளிப் போனது.

அபினந்தனை பாகிஸ்தான் தரப்பு ஒப்படைப் பதற்கு முன்னர்தான் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்யப் பட்டுள்ளது. அந்த வீடியோ, அபினந்தன் விடுதலை க்கு சில மணி துளிகளுக்கு முன்னர் பாகிஸ்தான் ஊடகங் களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

வீடியோவில் விங் கமாண்டர் அபினந்தன், ‘எல்லை கட்டுப்பாட்டை மீறி, பாகிஸ்தானில் நுழைந்தது ஒரு இலக்கை கண்டு பிடிக்கத் தான். பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தரை யிறங்கிய பின்னர், என்னைத் தாக்கிய கும்பலிட மிருந்து பாகிஸ்தான் ராணுவம் தான் என்னை காப்பாற்றியது. 

பாகிஸ்தான் ராணுவம் மிகவும் தொழில் நேர்த்தி யுடன் நடந்து கொண்டது. நான் அதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்' என்று பேசியுள்ளார். அந்த வீடியோ பல இடங்களில் கட் செய்யப் பட்டுள்ளது. குறைந்த பட்சம் 15 வெட்டுகளாக அந்த வீடியோவில் இருந்தது.

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப் படையுடன் சண்டை யிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப் பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரை யிறங்கினார். 


பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. இதை யடுத்து, அவரை அந்நாட்டு அரசு, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியா விடம் ஒப்படைத்தது. கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. அதில் தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். 

இதை யடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலை நாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளு க்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings