மலை உச்சியில் ராணுவ பீரங்கியை நிறுத்தி பாகிஸ்தான் உலக சாதனை !

0
மிக மிக உயரமான மலை உச்சியில் ராணுவ பீரங்கியை (Operational Tank) நிறுத்தி பாகிஸ்தான் ராணுவம் உலக சாதனை படைத்துள்ள தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


சாத்தியமற்ற பணிகளை உறுதியுடன் செய்து முடிப்பதே எங்கள் அடையாளம் என பாகிஸ்தான் ராணுவம் மார்தட்டிக் கொள்வது வழக்கம். இம்முறையும் அப்படியொரு சாத்தியமற்ற விஷயத்தைச் செய்து முடித்திருக் கிறார்கள். 

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு கைபர் பாக்தூன்க் வாவின் என்னும் பழங்குடி மலைப்பகுதி உள்ளது. 

உலகின் மிகவும் கடினமான நிலப்பரப்பு களில் ஒன்றான அங்கு, 12,000 அடி உயரத்தில் மலைச் சிகரத்தின் உச்சியில் ராணுவ பீரங்கியை நிலை நிறுத்தி யுள்ளது பாகிஸ்தான். 

அதாவது கடல் மட்டத்துக்கு மேலே 3,176 மீட்டர் உயரத்தில் பீரங்கியைக் கொண்டு சேர்த்துள்ளது.


ஆப்கானிஸ் தானிலிருந்து தீவிரவாதிகள் கைபர் மாவட்டத்து க்குள் நுழைவ தாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் ராணுவ தளபதி அமிர் தெரிவி த்துள்ளார். `

கரடுமுரடான பகுதிகளைக் கடந்து, 6 மணி நேர போராட்டத் துக்குப் பின்னர் பீரங்கியை அங்கே கொண்டு சென்று சேர்த்தோம்’ என அமிர் குறிப்பிட் டுள்ளார். ஆப்கானிஸ் தானின் டோரா போரா மலைப் பகுதிக்கு நேராக இந்தப் பீரங்கி வைக்கப் பட்டுள்ளது. 

மேலும்
அவ்வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவினால் தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்குமாம். மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ் தானுக்கு புதிய அச்சுறுத்தலாக இருக்குமெனக் கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings