போராட்டக் காரர்களை தெறிக்க விட்ட பொது மக்கள் - சிக்னலை தாண்டிய நிமிடம் !

0
சபரிமலையில் நேற்று முன்தினம் கனகதுர்கா, பிந்து ஆகிய ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் போலீஸின் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரமான நள்ளிரவில், மாற்றுப் பாதையில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். 
இரு பெண்கள் சபரிமலை சந்நிதானம் வரை சென்ற விவகாரம் கேரளாவை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே கடையடைப் புகளும் போராட்டங் களும் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை மாலை கேரளாவில் ஐம்பது லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மனிதச் சுவர் போராட்டம் நடைபெற்றது. வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுங்கட்சி சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப் பட்டது. 


இந்தப் போராட்டம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் இரு பெண்கள் சபரிமலை சென்றதால் அவர்களை ஆளும் கட்சியான கம்யூனிஸ்டு கட்சிதான் அனுப்பி வைத்தது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரு பெண்கள் சபரி மலைக்குச் சென்றதைக் கண்டித்தும் கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சபரிமலை கர்ம சமிதி அமைப்பு மற்றும் பா.ஜ.க-வினர் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப் பட்டது. 

மேலும், போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியினரும் களத்தில் இறங்கி, போராட்டத் தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந் தனர். 

சில இடங்களில் கர்ம சமிதி அமைப்பினரு க்கும் கம்யூனிஸ்டு களுக்கும் இடையே நடந்த மோதல் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மலபுரம் மாவட்டத்தில் உள்ள எடப்பல் என்ற இடத்தில் ஒரு சிக்னலை தாண்டி நூற்றுக் கணக்கான போராட்டக் காரர்கள் தங்களின் கைகளில் கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் வருகின்றனர். 

அங்கு சரியான நேரத்தில் வந்த பொது மக்கள் மற்றும் ஆளும் கட்சியினர் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகள் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி அடித்தனர். 
ஒருவர், ‘விடாதே அடி அடி விரட்டி அடி’ என்று பேசும் சத்தம் மட்டும் கேட்கிறது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதே போன்று கொச்சியில் ஒரு ஹோட்டல் முன்பு கூடிய சில போராட்டக் காரர்கள் கடையை மூடுமாறு வலியுறுத்து கின்றனர். அவர்களுடன் கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


அப்போது கடைக்காரர் வெளியில் வந்து ‘என்னிடம் சூடாக நிறைய பரோட்டாக்கள் உள்ளன. அது தீரும் வரை கடையை மூடப்போவதில்லை’ எனக் கூறுகிறார். கடைக்கு வெளியில் சில இளைஞர்கள் போராட்டக் காரர்களை வெளியில் தள்ளுகின்றனர். 
இந்த வீடியோவும் நேற்று முதல் செம்ம வைரல். மேலும், சில இடங்களில் பெண்களே போராட்டக் காரர்களை விரட்டிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவே போராட்டக் களமாக மாறியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)