சிறுமி கடத்தல் வழக்கில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீஸார் !

0
98 நாள்களைக் கடந்தும் கிடைக்காமல் திணறடித்த காஞ்சிபுரம் ஹரிணி காணாமல்போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. `ஹரிணியைக் கடத்தியவன்' என்று அந்த மாவட்டக் காவல்துறை மர்மநபர் ஒருவரின் சிசிடிவி புட்டேஜில் கிடைத்த புகைப் படத்தை வெளியிட்டி ருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள் தான் ஹரிணி. 

கடந்த 98 நாள்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர்.

நடுராத்திரியில் ஹரிணி காணாமல் போக, பதறிப் போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. அதோடு, 'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். 


இதற்கிடையில், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, 'ஹரிணியைக் கண்டு பிடித்து கொடுப்பவர் களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். 

அதைச் சமூக வலை தளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்தத் தகவல்கள் அனைத்தை யும் விகடன் இணையதளம் தொடர்ந்து செய்தியாகப் பதிந்து வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்தார்கள். இருந்தாலும் ஹரிணி பற்றி நம்பிக்கை தரும் எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. 

இதற்கிடையில், காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால், ஹரிணி காணாமல் போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறி வந்தார்கள். 
`ஹரிணி கிடைக்கும் வரை நகர மாட்டோம்' என்று அணைக்கட்டு காவல் நிலையத்தின் முன்பே கதி என்று கிடந்த அந்தத் தம்பதி வேலைக்கும் போகாமல், சரியாகச் சாப்பிடாமல் அல்லாடி வந்தது. 

குறிப்பாக, காளியம்மாள் ஹரிணியை நினைத்து நினைத்து உள்ளம் குமுறியபடி, சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் அரற்றி வந்திருக்கிறார். இதனால், அவர் படுத்திருந்த வெக்காளி யம்மன் கோயிலில் மயங்கி விழுந்தி ருக்கிறார். 

அவருக்கு 100 டிகிரியைத் தாண்டி கடும் ஜுரமும் ஏற்பட, அவரை மருத்துவ மனைக்கு அழைத்து ப்போய் சிகிச்சை யளித்தார்கள். ``மருத்துவத்தால் ஒண்ணும் பண்ண முடியாது. ஹரிணிதான் அவருக்கு மருந்து" என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

இந்நிலையில், நமது செய்தியைப் பார்த்துவிட்டு, காளியம்மாளையும் வெங்கடே சனையும் போனில் அழைத்து தைரியப் படுத்தினார் லதா ரஜினிகாந்த். 

அதோடு, மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை பற்றியும் அதை மீட்க தனது பீஸ் ஆப் சைல்டு அமைப்பு மூலம் முயல்வ தாகவும் குறிப்பிட்டார். 

இதனால், சுறுசுறுப் படைந்த காஞ்சிபுரம் காவல் துறையும் அணைக்கட்டு காவல் நிலைய போலீஸாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப் படுத்தி இருக்கி றார்கள். காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி

ஹரிணி காணாமல் போன அன்று அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் இருவர் இருந்தது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அவர்களின் படங்களை காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி இன்று வெளி யிட்டுள்ளார். 

இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி யிடம் பேசினோம். “ஹரிணி கடத்தல் சம்பவம் நடந்த போது அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பதிவான காட்சிகள் இவை. அவர்கள்தான் எங்களுக்குக் கிடைத்த ஒரு முக்கியமான க்ளூவாக நினைக்கிறோம். 


அவர்கள் தான் குழந்தையைக் கடத்தினார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால். அவர்கள் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந் திருக்கிறார்கள். 

இதனால் அவர்களை விசாரித்தால் காணாமல் போன ஹரிணி பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஹரிணியைத் தேடி தனிப்படை யினர் மும்பை சென்றுள்ளனர். விரைவில் ஹரிணியைக் கண்டு பிடித்து விடுவோம்” என்கிறார்.

சாதிக் அலி இது பற்றி, நம்மிடம் பேசிய இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் சாதிக் அலி, ``விகடன் இணையதள செய்தியை இரண்டு மாதங்களாக லதா ரஜினிகாந்த் மேடம் தொடர்ந்து படிச்சுட்டு வந்திருக்காங்க. 

அதோடு, இரண்டு மாதங்களாகத் தன்னோட அமைப்பு மூலம் ரகசியமா ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்காங்க. 

`ஹரிணி சாயலில் இருக்கும் குழந்தைகள்' என்று கல்கத்தா, தர்மபுரின்னு பல இடங்களில் இருந்து கிடைத்த புகைப்பட ஆதாரங்களைத் தொடர்ந்து, அங்கெல்லாம் தனிப்படை சல்லடைபோட்டு தேடியது. 

எந்த முன்னேற்றமும் இல்லை. சில தினங்களுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த சிலர் ஹரிணி போல் இருக்கும் குழந்தை போட்டோவை அனுப்பினர். அது லதா ரஜினிகாந்த் மேடத்து க்கும் கிடைச்சுருக்கு. தனிப்படைக்கும் கிடைச்சிருக்கு. 

லதா ரஜினிகாந்த் மேடம் பாலிவுட் முக்கிய சினிமா புள்ளி மூலமா மும்பை கமிஷனிரிடம் பேசி, ஹரிணி போல் உள்ள குழந்தையைப் பற்றி விசாரிக்க சொல்லி இருக்கிறார். 

ஹரிணி பெற்றோர்களிடம் காண்பிச்சப்ப, 'இது ஹரிணிதான்' ன்னு அடிச்சு சொன்னாங்க. எங்களுக்கும் அப்படித் தான் இருந்துச்சு. லதா ரஜினிகாந்த் மேடமும் அப்படித் தான் சொன்னாங்க. 

இதற்கிடை யில், ஹரிணி காணாமல் போன அன்னைக்கு அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு அருகில் இருந்த ஏ.டி.எம் சென்டர் ஒன்றில் உள்ள சிசிடிவி புட்டேஜில் சந்தேகத்துக் கிடமான மர்மநபர் ஒருவர் பதிவாகி இருக்கிறார். 


போலீஸார் அந்த நபர்தான் ஹரிணியைக் கடத்தியவர்னு உறுதி பண்ணி இருக்காங்க. அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக் கிறாங்க. 

மேலும்

இதற்கிடை யில், தனிப்படை போலீஸார் மும்பைக்குப் போய், ஹரிணி பாப்பாவை மீட்க இருக்கிறார்கள். 'இரண்டு நாள்களில் நல்ல சேதி கிடைக்கும்'னு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சொல்லுது" என்றார் மகிழ்ச்சியாக.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)